dinamalar telegram
Advertisement

உருளைக்கிழங்காக மாறிய பாஸ்; வீடியோ காலில் கூத்து

Share
லண்டன்: கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, பல நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளனர். வீட்டில் பணிபுரிபவர்கள், அலுவலக மீட்டிங்கிற்கு அதிகளவில், 'வீடியோ கால்' பயன்படுத்துகின்றனர்.

தனது பணியாளர்களுடனான வீடியோ கால் மீட்டிங்கில், முதலாளி தெரியாமல் உருளைக்கிழங்கு போல தோற்றமளிக்கும், பில்டர் ஆப்சனை தொட்டுவிட்டார். இந்த ஆப்சனை எவ்வாறு மாற்ற வேண்டும் என அவரால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், மீட்டிங் முழுவதும் உருளைக்கிழங்கு தோற்றத்திலே இருந்துள்ளார்.

பணியாளர்களால் இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியான சில மணி நேரங்களில், பல கோடி பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (2)

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

    நல்ல என்டேர்டைன்மெண்ட்

  • வெகுளி - Maatuthaavani,இந்தியா

    ஹா..ஹா... பல பாசுகள் முதல் தரவையா கம்ப்யூட்டரை தொடறாங்க போல....

Advertisement