Advertisement

கொரோனாவை அறிவால் வெல்ல வேண்டும்: இம்ரான் மீண்டும் சர்ச்சை

இஸ்லாமாபாத்: உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில், ஐந்தாம் இடத்தில் உள்ளது பாகிஸ்தான். அந்நாட்டில் கொரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,900க்கும் மேல் சென்றுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, உலக சுகாதார அமைப்பின் அறிவுரைப்படி, பல்வேறு நாடுகளும், ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.


இந்நிலையில், கடந்த 24ம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம் டி20 கிரிக்கெட் போட்டி போன்றது அல்ல; இந்த கொரோனா நெருக்கடி ஆறு அல்லது ஏழு மாதங்களுக்கு தொடரக்கூடும். எனவே, அரசு தரப்பில் கவனமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது. ஊரடங்கு உத்தரவு, பணிநிறுத்தம் ஆகியவை, உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவதை சீர்குலைக்கும். சமுதாயத்தின் ஏழை பிரிவினரைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். அவர்கள் ஊரடங்கின் போது வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பர். நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படும். அவர்கள் பொருளாதாரத்தின் சுமை களைத் தாங்க வேண்டியதில்லை. இவ்வாறு இம்ரான் தெரிவித்தார். இதற்கு, உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அறிவால் வெல்ல வேண்டும்!இந்நிலையில் இன்று (1ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்த இம்ரான்கான், 'ஊரடங்கு உத்தரவால் ஏழைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். அதனால், பாகிஸ்தானில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. வைரஸ் தொற்றை மக்கள் அறிவால் வெல்ல வேண்டும். கடுமையான கட்டுப்பாடுகளை அரசு விதித்துத் தான், வைரசைக் கட்டுப்படுத்த முடியும் எனக் கருதக்கூடாது' என, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இம்ரான்கானின் இந்த முடிவு குறித்து, 'மக்கள் தொகை மிகுந்த நாடுகளில், சமூக விலகல் மற்றும் மக்கள் தங்களை தனிமைப் படுத்திக் கொண்டால் மட்டுமே, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இம்ரான் அறிவித்திருப்பது அபத்தமானது மட்டுமல்ல மக்களுக்கு ஆபத்தானதும் கூட' என, சமூக ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (43)

 • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

  இப்பவும் பிச்சை எடுக்கும் போஸ் தானா?

 • Jayvee - chennai,இந்தியா

  அது சரி.. உங்களுக்குத்தான் பொது அறிவே கிடையாதே ..

 • r ganesan - kk nagar chennai,இந்தியா

  இதுதான் சினிமாவிலும் கிரிக்கெட்டிலும் ஒருவன் பாப்புலராக இருக்கிறன் என்பதற்காக அவனை அரசியலிலும் இழுத்துவிடுவதின் விளைவு, இது நமக்கும் ஒரு வார்னிங் மாதிரிதான்,

 • Sami Sam - chidambaram ,இந்தியா

  எல்லோருக்கும் இருப்பது ஒரு உயிர்தான் அது ஒருமுறை போனால் திரும்பவராது என்பதை உணரவில்லையா அல்லது தனது நாட்டின் மக்கள்தொகையை குறைக்கவேண்டும் என்ற எண்ணமா

 • IYER AMBI - mumbai,இந்தியா

  எப்படி பார்த்தாலும் லாபம்தான். பாதிக்குமேல் மக்கள்தொகை குறைந்ததாலும் அல்லது தீவிரவாதிகள் கூட்டத்தில் பாதிப்பு நேர்ந்தாலும் உலக நாடுகளிடம் கொஞ்சமாகவே உதவிகேட்டு பிழைத்துக்கொள்ளலாம்தானே. அறிவுக்களஞ்சியம்.

Advertisement