Advertisement

சுற்றித் திரியும், காளைகள்; நெம்பி எடுக்கும் போலீஸ்!

புழல் : ஊரடங்கு உத்தரவை மீறி ஊரை சுற்றுவோரை, லத்தியால் அடித்தால் பிரச்னையாகி விடுகிறது என்பதால், அவர்களை கட்டுப்படுத்த, போலீசார் புதுப்புது வகையாக நுாதன தண்டனைகளை எப்படி வழங்கலாம் என, தங்களது பள்ளி பருவ அனுபவங்களை செயல்படுத்துகின்றனர்.

'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, நாடெங்கும், 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.மளிகை, காய்கறி, இறைச்சி கடைகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது. ஆனால், பலர் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு உத்தரவை மீறி, அலட்சியமாக ஊரை சுற்றி, பொதுமக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களை மடக்கி பிடிக்கும் போலீசார், பல்வேறு நுாதன தண்டனைகளை வழங்கி, அறிவுரை கூறுகின்றனர். ஆனாலும், அவர்கள் அடங்குவதாக இல்லை. இதனால், விதிமீறுவோரை கட்டுப்படுத்த, போலீசார் தங்களின் பள்ளிப்பருவத்தில் அனுபவித்த தண்டனைகளை நினைவு கூர்ந்து, அதை அடங்காதவர்களுக்கு அளித்து வருகின்றனர்.

தோப்புக்கரணம், தவளை ஜம்பிங், அங்கப் பிரதட்சணம், நாற்காலி போல் உட்காருவது, கொரோனா குறித்து கேள்வி பதில் எழுதுவது, நெற்றியில் தலை எழுத்து, சுவாசப்பயிற்சி, இரு கையிலும் புத்தகங்களை சுமந்து தராசு தட்டு போல் வளைந்து நிற்பது என, பல்வேறு நுாதன தண்டனைகளை, இதுவரை பலருக்கும் வழங்கி உள்ளனர்.அதையும் மீறி ஊர் சுற்றுபவர்களை, ஏப்., 14ம் தேதி வரை எப்படி கட்டுப்படுத்துவது என, புதிய நுாதன தண்டனைகளை ஆலோசித்து வருகின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

    சட்டத்தைமீறுவதுலே இளையவர்களில் பலரும் முஸ்லீம்கள் என்று தெரியும்போது வருத்தமாயிருக்கு பலர் ஏழைகள் அப்பா அம்மா வின் வருமானத்துலே வயறு வளர்க்கும் இதுகள் எல்லாம் பைக் எடுக்கவே கூடாது என்று சட்டம் போடவும் பிடுங்கிண்டால் போலீசு சுருட்டறான் என்று பேசுறானுக என்னாதுக்குவம்பு பிடிச்சு பாதுகார்பொரேஷகக்கூஸ்களை கழுவி சுத்தப்படுத்த சொல்லவும் கைலே துடைப்பம் முறம் தந்துகொஊட்டிப்பெருக்கி அல்ல சொல்லுங்க போட்டோ எடுத்து டிவிலே காட்டுங்க பெத்தா வயறு படும்பாடு தெரியும்

  • Sampath Kumar - chennai,இந்தியா

    புடிச்சு போடுங்க சார் வீட்டுக்கும் அடங்க மாட்டானுக நாட்டுக்கும் அடக்குங்க மாட்டானானுக இவனுக்களை சுட்டு தள்ளினாள் தகும்

  • Bhaskaran - Chennai,இந்தியா

    Pothu kakooskalai suththam seiya sollungal

  • ராஜ் -

    கர்நாடக போலீசை பாத்து கத்துக்கலாம். தப்பில்லை.

  • selva - Chennai,இந்தியா

    சூப்பர் போலீஸ், ..I am Happy

Advertisement