Advertisement

எங்க ஏரியா; உள்ளே வராதே! மக்கள் அறிவிப்பால் பரபரப்பு

திருப்பூர்:கொரோனா காரணமாக, திருப்பூரில் உள்ள ஒரு பகுதியில் வெளி நபர்கள் உள்ளே வரக் கூடாது என்று பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, திருப்பூர் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஊரடங்கு உத்தரவுஅமலில் உள்ளதால், பொதுமக்கள் அத்தியாவசிய தேவையை தவிர்த்து வெளியே வரக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், திருப்பூர் - தென்னம்பாளையம், கரைத்தோட்டத்தில், நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக, அப்பகுதி மக்கள், வீதியின் நுழைவாயில் முன்பு கயிறு மற்றும் குச்சியால் உள்ளே நுழையாமல் இருக்க தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர்.'கொரோனா வைரஸ் காரணமாக, வெளிநபர் யாரும் இப்பகுதிக்குள் வருவதற்கு அனுமதியில்லை.முக கவசம் அணிந்து, கைகளை கிருமி நாசினியால் நன்றாக கழுவிய பின், உள்ளே வரவும்,' என்று அறிவித்துள்ளனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

Advertisement