dinamalar telegram
Advertisement

கொரோனாவை தடுப்பது எப்படி: ஜி-20 தலைவர்கள் இன்று ஆலோசனை

Share
புதுடில்லி :'கொரோனா' வைரஸ் பாதிப்பு, உலகளாவிய பிரச்னையாக உருமாறியுள்ள நிலையில், அதை எதிர்கொள்வது குறித்து, 'ஜி - 20' அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், இன்று (மார்ச் 26) ஆலோசனை நடத்த உள்ளனர். 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடக்கும் இந்த சந்திப்பில், பிரதமர், நரேந்திர மோடியும் பங்கேற்கிறார்.

உலகெங்கும் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், 4.24 லட்சம் பேருக்கு தொற்றியுள்ளது. உலகெங்கும், பலியானோர் எண்ணிக்கை, 19 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இந்த வைரஸ் பரவுவதை தடுக்க, அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, 'சார்க்' எனப்படும் தெற்காசிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், வீடியோகான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.அதைத் தொடர்ந்து, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மானுடன், பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில், தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வளர்ந்து வரும் மற்றும் வளர்ந்த நாடுகள் இணைந்து, கொரோனாவை எதிர்கொள்வது குறித்து அவருடன் பேசினார்.மோடியின் ஆலோசனையை அடுத்து, பொருளாதார ஒத்துழைப்புக்கான, ஜி - 20 அமைப்பின் கூட்டத்தை கூட்டுவதற்கு, சவுதி அரேபியா நடவடிக்கை எடுத்துள்ளது. அமைப்பின் தலைமை பொறுப்பில், சவுதி அரேபியா உள்ளது. இந்த, ஜி - 20 அமைப்பில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம்பெற்றுள்ளன.

இதைத் தவிர, ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளது.சவுதி அரேபியாவின் அழைப்பை ஏற்று, ஜி - 20 நாடுகளின் தலைவர்கள், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், இன்று நடக்க உள்ளது. அதில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு ஒருங்கிணைந்த முயற்சி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இந்த வைரஸ் பரவாமல் தடுக்கஒவ்வொரு நாடும் எடுத்து வரும் நடவடிக்கைகள், அவர்களுடைய அனுப வங்களும் பகிர்ந்துகொள்ளப்பட உள்ளன.முன்னுதாரண அமைச்சர்கள்சமூக விலக்கலை கடைப்பிடிக்கும்படி, நாட்டு மக்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அவருடைய தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமரின் அரசு இல்லத்தில், நேற்று நடந்தது. வழக்கமாக கூட்டம் நடைபெறும் அறையில் இருக்கும், மிகப் பெரிய மேஜை நீக்கப்பட்டது.அனைத்து அமைச்சர்களும், தனித் தனியாக, போதிய இடைவெளிவிட்டு அமர்ந்து, கூட்டத்தில் பங்கேற்றனர். ஆவணங்கள் வைத்துக் கொள்ள, ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய மேஜை தரப்பட்டிருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

 • ஆப்பு -

  மக்கள்தான் வீட்டில் முடங்கி காண்டாவணும். மோடி ஐயாவெல்லாம் வேலை பத்து சுறுசுறுப்பா யோகா பண்ணிக்கிட்டிருக்கணும். நாம செய்யறது வெட்டி வேலை. அதனால் நாமக்கல் கோழி போல ஊட்டிலேயே இருக்கணும். இவிங்க எல்லாம் நாட்டுக்கு உழைக்கிறேன்னு பிசியா இருக்கலாம். மக்களை அடிக்கிற போலீசை ஒரு நாலு நாள் வூட்டிலெ இருக்கச் சொல்லுங்க. அப்பத்தான் வெளியில் செல்லும்போது கிடைக்கும் சந்தோஷம் புரியும். என்னவோ சேவை முருக்கு எல்லாம் பண்றாங்களாம்.

 • S B. RAVICHANDRAN -

  முதல்ல உங்களை காப்பாத்திங்கப்பா அப்புறம் உன்னால் எனக்கு வந்தது என்னால் உனக்கு வந்தது என சண்டை போடாதீர்கள். எப்ப சார் தடையை திறப்பீங்க, சாரி தடையை நீக்குவீங்க.

 • Kalam - Salem,இந்தியா

  அமெரிக்கா சார்பாக புரூக்ளின் ஹாஸ்பிடல் மருத்துவர் , இந்தியா சார்பாக அப்போலோ மருத்துவர் , இப்படி அந்த அந்த நாட்டின் மருத்துவ வல்லுநர் அடங்கிய குழுவும் விவாதத்துல பங்கெடுத்தா ஏதாவது முன்னேற்றம் காண வாய்ப்பு உண்டு . இப்படி என்ன பிரச்சினைக்கும் அரசியல்வாதியே தீர்வு கொடுக்கணும்னா எப்படி முடியும் ?

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  எல்லா மதம் காராலின் வேத புத்தகம் லே பலநல்லவிஷயங்கள் தான் இருக்கு யூரை கொல்றது மஹாபாவம் என்றும்தான் உபதேசம்பென்றது கீதை ஆர் குரான் ஆர் பைபிளே இல்லாத நல்ல கருத்துக்கள் படிக்குறாங்களே எல்லோரும் ஆண்டவனை நம்பாதே என்று சொல்ற திக திமுக தவிர எல்லோரும் தனக்கு மேல ஒருவன் இருக்கிறான் அவன் செய்யும் விதிப்படியேதான் நாம் மக்களெல்லோரும் நடக்கிறோம் என்று உறுதியாக எவன் நம்புறானோ அவன் செய்யும் பிரார்த்தனைகளை இறைவன் முதலில் ஏற்கிறான் என்பது 100% உண்மை நம் முன்னோர்கள் (முக்கியமா பிராமனா ) ரொம்பவே மாடி ஆச்சாரமா இருந்தாங்க தனிக்குடித்தனம் என்றுபோயிட்டு தனிதனித்தீவுகளா ஆயிட்டாங்க ஒரு தலைவன் என்று வீட்டுலே இருக்கும் பெரியவாளை நம்பினா அவா சொல்படியே தான் எல்லாம் நிகழ்த்தினார்கள் ஒன்றும்குறைஞ்சுபோகலே நன்னாவேதான் இருக்கோம் மாடி ஆச்சாரம் என்பதை வெளிவேஷம்னு கேலிபேசியவர்களும் உண்டு அவா தங்களை யாரும் தொட்டுபேசவே அனுமதிக்கமாட்டாங்க என்பதும் உண்மை வீட்டுலே ஒரு குலந்திக்கு அம்மைவந்துட்டாள் வேப்பிலைகளை பரத்தி அதுலே தான் படுக்கவச்சு ருப்பா அம்மை இறங்கினது ம் தான் வேல்=பிள்ளைகலந்து மஞ்சள் கரைச்சி நீரில் குளிக்கவச்சு (அந்நதண்ணீரை யம் வெய்யில்லே வச்சுருப்பாங்க அந்த சுட்டுலெந்தான் குளிப்பாட்டுவாங்க மாரியம்மன் வீட்டுலே வந்துருக்கார் என்று அவ்ளோமடியாக தாளிக்காமல் மிள்காய்ப்போடாமல் எல்லோருக்கும் பத்திரமா சாப்பாடுதான் பிகாஸ் நோய் பரவப்படாது என்ற நல்லெண்ணம். இந்த கொடூரன் கொரோனா பாரதம் லே படிச்ச அரக்கனைப்போல உலகையே அளிக்கவந்துருக்கானே எவனோ செய்ரஹா தவறுக்கு இந்தஉலகுக்கே இவ்ளோ பெரிய தண்டனையா அப்பா நாராயணா மஹாதேவ பிரும்ம எல்லோரும் வாங்கோ இந்த அரக்கனை அளிக்க வேண்டும் என்று கெஞ்சிக்கேட்டு கூப்பிடுறேன் இந்தக்கிழவி என்னால் வேறு எதுவும் செய்ய இயலாதே இறைவனை வேண்டுகிறேன் ஷஷ்ட்யகவசம் விநாயகர் அகவல் அனுமன் சாலிசா படிக்கிறேன் எப்போது சாரமா என்று ஜெபிக்கிறேன் இந்தஉலகை எல்லாமக்களையும் இந்த அரக்கனிடமிருந்துக்காப்பாற்றவேண்டும் என்று கெஞ்சுகிறேன்

 • ஆப்பு -

  அப்பாடா... கெத்து காட்ட அடுத்த மீட்டிங் வந்தாச்சு.... பெரிய அச்சுறுத்தல்... நானாக் கொண்டு இந்தியா முழுவதையும் கட்டுப்பாடில் கொண்டு வந்திருக்கிறேன். இதை ஏற்கனவே செய்து முடித்த சீனா, சவூதி போன்ற நாடுகள் தங்களுக்குள்ளே சிரிச்சுப்பாங்க.

Advertisement