Advertisement

வங்கிகடன் தவணை தொகை; சலுகை காட்டுமாறு கோரிக்கை

புதுடில்லி : நாடு முழுக்க முடக்கப்பட்டுள்ளதால், பல வணிகங்கள், மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, பல தொழில்துறை பிரதிநிதிகள், கடன்களை தாமதமாக திருப்பிச் செலுத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து, வாடிக்கையாளர்கள், தாங்கள் வாங்கிய கடனை தாமதமாக திருப்பி செலுத்துவதை, வங்கிகள் ஏற்றுக்கொள்ள, ரிசர்வ் வங்கி அனுமதிக்கும் என தெரிகிறது.

இது குறித்து வங்கித் துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சுயதொழில் செய்பவர்கள், சிறு வணிகர்கள் போன்றவர்கள், பல்வேறு தேவைகளுக்காக கடன் வாங்கியிருக்கின்றனர். இது போல் தனிநபர்களும், வீடு, கார், வீட்டு உபயோக சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கடன் வாங்கி இருக்கிறார்கள். கொரோனா தாக்குதல் காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில், வருமானம் ஈட்டுவதும், கடனுக்கான தவணைத் தொகையை திருப்பிச் செலுத்துவதிலும் சிரமங்கள் ஏற்பட்டு உள்ளன.

தனிநபர் மற்றும் வணிகங்கள் என, இரு தரப்புகளிலிருந்தும் இது குறித்து கவலையை தெரிவித்து வருகின்றனர். எனவே, கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதில் இருக்கும் சிரமங்கள் குறித்து, இந்திய வங்கிகளின் சங்கம் ரிசர்வ் வங்கியிடம் பேசியிருக்கிறது. இத்தகைய விதிவிலக்குகளுக்கு, ரிசர்வ் வங்கியின் அனுமதி தேவைப்படும். இப்பிரச்னை குறித்து ரிசர்வ் வங்கியும் ஆலோசித்து வருகிறது. மேலும், அரசும் இது குறித்து ஆலோசித்து வருகிறது.

ஏற்கெனவே, வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிப்பது, பிற வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பது உள்ளிட்டவற்றில் சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. இதன் அடுத்த கட்டமாக, தவணை தொகை செலுத்துவதிலும் சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (15)

 • Selvaraj Thiroomal - Chennai,இந்தியா

  வெறும் வங்கிகளே கடன் வழங்குவதில்லை. வங்கிசாரா நிதிநிறுவனங்களே அதிகளவில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கின்றன. இதையும் தாண்டி தனிநபர்கள், சிறிய நிதிநிறுவனம், அடகுக்கடை நிறுவனங்கள் பலருக்கும் நிதியுதவி,, அதன்மூலமே தங்கள் நிறுவனங்களை நடத்துகின்றன. இதுவோர் சங்கிலி தொடர். ஆனால் கடன் வழங்குவோர் அனைவரும் வங்கியின் வாடிக்கையாளர்கள், வங்கியின் உதவியால் தங்கள் நிறுவனங்களை நடத்துகிறார்கள்.. இப்போது அதுபோன்ற நிறுவனங்களே மிரட்டல், அபராதம் என்ற கடினமான முறைகளில் கடனுக்கான தவணை , வட்டி போன்றவற்றை வசூலிக்கிறார்கள். மத்திய அரசு , ரிசர்வ் வங்கி, இப்போது தகுந்த உத்தரவுகளை, சலுகைகளை வழங்கி இத்தொடர் சங்கிலி அறுந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும்... இது பலரின் வேண்டுகோள்.

 • Sri,India - India,இந்தியா

  தனியார் பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் வசூலிக்க நீதி மன்றம் உத்தரவிட வேண்டும். பள்ளிகளின் கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் பெற்றோர் சாரக நேரடியாக செலுத்தி பின்னர் பெற்றோரிடம் இருந்து வட்டி இல்லாமல் வசூல் செய்து கொள்ளலலாமே?? .

 • Bhaskaran - Chennai,இந்தியா

  Aaru maathangalukku pin kattalaam enru arasu arivikka vendum .varumaanavari salugaitharanum

 • Bhaskaran - Chennai,இந்தியா

  மத்திய அரசு இன்னும் உதவிகள் அறிவிக்க வில்லை. ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு

 • Tamil - chennai,இந்தியா

  மொத்தமாக ஒரு வருட பள்ளி பீஸ் கட்டுவதற்கு தொல்லை செய்வதை தடை செய்து 6 மாதத்திற்கு பிரித்து கட்டுவதற்கு அரசு அணைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உத்தரவு இட வேண்டும். அணைத்து வித லோன் தவணைகள் 3 மாதத்திற்கு சலுகை கொடுக்கப்படவேண்டும் .வருமானம் இல்லாமல் மக்கள் எப்படி பணம் கட்டுவார்கள். இதை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை இதுவரை? அது போல நிலைமை சரி ஆனபின்பு மொத்தமாக வசூல் செய்ய கொடுமை படுத்த கூடாது. ஒவ்வரு மாதமும் சிறிது சிறிதாக செலுத்தப்படும் தொகையுடன் ஒரு 6 மாதத்திற்கு செலுத்த வழிவகை செய்யபட வேண்டும்.

Advertisement