Advertisement

வேடிக்கை பார்க்கவா ஊரடங்கு? அலட்சியம் ஆபத்தாகும்

சென்னை: 'கொரோனா' தொற்றை தடுக்க, நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு, நேற்று முன்தினம் (மார்ச் 24) நள்ளிரவு, 12:00 மணி முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து, தமிழகத்தில், போலீசாரின் கெடுபிடி அமலாகி உள்ளது.

நேற்று காலையில், குடும்ப தலைவர்கள், பால், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க, கடைகளுக்கு சென்று வந்தனர். அதை தொடர்ந்து, வீட்டில் இருக்கும் இளைஞர்களும், சில நடுத்தர வயதினரும், மொபைல் போனும் கையுமாக, டூ - வீலர்களிலும், கார்களிலும், சாலைகளில் சுற்றி திரிந்தனர்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், நகரப் பகுதிகளில், கும்பல் கும்பலாக இளைஞர்கள் சுற்றி திரிந்தனர். பெரும்பாலானவர்கள், ஊரடங்கை வேடிக்கை பார்க்க, சாலைகளில் சுற்றினர். தெருமுனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில், கூட்டமாக கூடி அரட்டை அடிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். மரத்தடி நிழல், பஞ்சாயத்து மன்ற கூடங்கள், கோவில், தேவாலயம் மற்றும் மசூதிகளின் அருகில் உள்ள பகுதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் அலுவலகங்கள் ஆகியவற்றில், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூடி பேசி பொழுதை போக்குகின்றனர்.

இந்த அலட்சியமான செயல்களால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, கொரோனா பரவி, உயிரிழப்பை ஏற்படுத்தும். ஊரடங்கை முறையாக கடைப்பிடிக்காமல், அத்துமீறும் கும்பலால், அவர்களுக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, 'சாலைகளில் திரியும் கும்பலை, போலீசார் சுற்றிவளைத்து பிடித்து, கடுமையாக தண்டிக்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (28)

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  இந்தியாவில் கொரோனாவினால் இறப்புகள் அதிகரித்தால் அது ஒழுக்கமற்ற மக்களால்தான் இருக்கும். இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் மக்கள் சட்டத்தை மதிப்பதில்லை. அதனால் அந்த நாடுகளில் இறப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது. ஜெர்மனி, கொரியா போன்ற நாடுகளில் சட்டம் வேலை செய்கிறது, மக்களின் ஒத்துழைப்பினால். பட்டால்தான் தெரியும்.

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  வியாதி வந்து படுத்ததும், அரசாங்கம் எங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை, மோடி ஒழிக என்று கூவுவார்கள்.

 • Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா

  இவர்களை அடிப்பதால் ஒரு பலனும் இல்லை. கைது செய்து உள்ளே வைக்கவேண்டும் முதலில் இந்த 21 நாட்கள் பிறகு இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அதுவரை உள்ளே. அப்பதான் திருந்துவார்கள். மற்றவர்களும் புறப்படுவார்கள். பேப்பரில் போட்டோ வருவதற்கும், போலிஸ் அடித்து திருத்துவதை மிகை படுத்தவும், சில விஷமிகள் வேண்டுமென்றே வைரஸ் பரப்புவதற்காகவும் கூட இருக்கலாம். ஆகையால் இவர்களை கோவிட் டெஸ்ட் செய்து பிறகு உள்ளே தள்ளவேண்டும். உண்மையானவர்களை கண்டறிய அடையாள அட்டை கொடுக்கவேண்டும்.

 • Chandramoulli - Mumbai,இந்தியா

  Driving licence to be ban lifelong. Ration card and Aadhar card , gas connection to be discontinued for 5 years. Take severe and stringent action for these reckless people's . Don't blame police only. They are also human being.

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  கெரோனாவின் வீரியம் புரியாதவர்கள் ஆடு மாடுகள்போல் சுற்றி திரிகின்றனர். அரண்மனையில் இருக்கும் இளவரசர் சார்லஸ் ஸே பாதிக்கப்பட்டுள்ளார். ராணியும் கணவரும் ஒருவாரம் முன்பே பாதுகாப்பாக வேறு இடம் சென்று விட்டனர். எனவே அனாவசியமாக சுற்றி திரிபவர்களை கடுமையாக தண்டிப்பதில் தவறில்லை.

  • VELAN S - Chennai,இந்தியா

   அப்படியில்லிங்க , இப்ப நடக்கிறத பார்த்தா போலீசுக்கு 144 தடையுத்தரவு என்றால் என்ன என்று தெரியவில்லை என்றுதான் நினைக்க வேண்டியுள்ளது . 144 தடையுத்தரவு என்றால் ஐந்து பேர் அல்லது அதற்கு மேல் ஒன்று சேர்ந்து போகுதலுக்கு தான் தடை , தனியா கேஸ் வாங்க ஸ்கூட்டரில் போகிறவனை எல்லாம் அடிப்பது தப்பு . அதுமாதிரி தனியா ஒருவன் ஸ்கூட்டரில் கடைக்கு போனால் அது தப்பில்லையே , அதனால் 144 தடையுத்தரவு என்றால் என்ன வென்று போலீஸ் உயர் அதிகாரிகள் போலிசுகளுக்கு டியூசன் எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் .

Advertisement