Advertisement

கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகளால் பரவாது

புதுடில்லி: கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மூலம் பரவாது என வங்கிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வங்கிகள் சார்பில், ரூபாய் நோட்டுகளை கையாளும் நிறுவனங்களின் சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ரூபாய் நோட்டுகள் மூலமாக, கொரோனா வைரஸ் பரவாது. இதை, உலக சுகாதார அமைப்பும் உறுதி செய்துள்ளது.

வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று, அதை, ஏ.டி.எம்., மையங்களில் நிரப்பும் பணியில் ஈடுபடும்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ரூபாய் நோட்டுகளால், வைரஸ் பரவாது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (20)

  • beembai - kovai,இந்தியா

    இந்த செய்தி முழுவதும் நம்பத்தகுந்தது அல்ல. வெளிநாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்கா, ஜப்பான் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில்..காகித பணகளின் புழக்கம் மிகவும் குறைவு. டெபிட், ,க்ரெடிட் கார்டுகள் மற்றும் ஆன்லைன் மூலமாகவே பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. புத்தம் புதிய ரூபாய் நோட்டுகளிலோ பூஞ்சைகள், வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஏற்கனவே பலமுறை பயன்படுத்தப்பட்ட காகித பணம் மற்றும் நாணயங்கள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் புறஊதா, அகச்சிவப்பு, மைக்ரோவேவ் கதிர்கள் மற்றும் கிருமிநாசினிகள்(டிஸ்இன்ஃபெக்டன்ட்) மூலமாக கிருமிகள் கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் இதுபோன்ற நடைமுறைகள் எந்தளவுக்கு செயல்படுத்தப்படுகிறது என்பது தெரியவில்லை. ஏராளமான அழுக்கான காகித பணம்,நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. அதனால் கரோனா போன்ற வைரஸ், பாக்டீரியா கிருமிகள் ருபாய் நோட்டுகளில் சிலகாலம் உயிர்ப்போடு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகவே கருதுகிறேன்.

  • chandran - ,

    என்ன சார் இது சும்மா அடிச்சி உடுங்க சார் வைரஸ் பரவும்னு. அப்டியாச்சும் லஞ்சம் கொரயும்

  • Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ

    தவறான தகவல்

  • Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா

    நான் கல்லூரி நாட்களிலேயே ரூபாய் நோட்டுகளை நுண்நோக்கியில் பார்த்து அருவெறுப்பு அடைந்தேன். அதில் லட்சக்கணக்கில் வைரஸ்கள் இருக்கிறது. அதுவும் கசாப்பு கடைகள் தொற்று வியாதி உள்ளவர்கள் கைகளில் புழங்கும் ரூபாய் நோட்டுகளால் ஆபத்து கண்டிப்பாக உண்டு

  • Ram Pollachi -

    தினமலர் செய்திதாளுக்கே கிருமிநாசினி அடிச்சிட்டு தான் வெளியே வருது. சலவை நோட்டுக்கே இஸ்திரி பெட்டியா?

Advertisement