Advertisement

குடும்பத்திற்கு ரூ.5,000 தர வேண்டும்: ஸ்டாலின்

சென்னை: 'தனிமைப்படுத்துதல் முயற்சி வெற்றி பெற, அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும், 5,000 ரூபாய் நிதியுதவியை அரசு வழங்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை: பொதுமக்களுக்கு முக கவசங்கள் வழங்க, மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கு, கலெக்டர்களுடன், தி.மு.க., - எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் ஆலோசித்து, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். வங்கிகளில் வாங்கியிருக்கும் வாகன கடன்களுக்கான மாதாந்திர தவணை தொகை வசூலை, வங்கிகள் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும்.

தனிமைப்படுத்துதல் முயற்சி வெற்றி பெற, அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும், அனைத்து ரேஷன் கார்டு தாரர்களுக்கும், 5,000 ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும். டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், போலீசார் ஆகியோருக்கு சிறப்பு ஊதியமாக, 5,000 ரூபாய் வழங்க, முதல்வர், இ.பி.எஸ்., நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (202)

  • சுந்தர் - Rajapalayam,இந்தியா

    அவசரப்படாதே எல்லோருக்கும் டோக்கன் உண்டு

  • Raja - Thoothukudi,இந்தியா

    அப்பாவும் மகனும் கொள்ளை அடிச்சு சேத்து வச்சிருக்கறதுல இருந்து 5000 என்ன பத்தாயிரம் தாராளமா கொடுக்கலாம். 300 500 கொடுத்தே ஓட்டு வாங்கிடலாம்னு திட்டம் போடுறவர்களுக்கு எப்படிமனசுவரும்

  • Raja - Thoothukudi,இந்தியா

    ஐயா துரை வாய திறக்காதீங்க. கிசோருக்கு 350 கோடி கம்யூனிஸ்ட்க்கு 25 கொடுத்துட்டு கொரானாவுக்கு ஒரு கோடி கொடுக்கறியே. சிஏஏ எதிர்ப்பு போராட்டத்துக்கு எத்தனை கோடி கொடுத்தீங்க. இந்த மாதிரி அரசியல்வாதிய பாக்கவே இல்லை.

  • S.Ganesan - Hosur,இந்தியா

    ஏற்கனவே மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ள மூன்று மாத கடன் ஒத்திவைப்பு, எம் .பி.கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொடுப்பது போன்றவற்றை திரும்பவும் சொல்லி என்னவோ தான்தான் இதெற்கெல்லாம் ஏற்பாடு செய்த மாதிரி ஸீன் போட முயல்கிறார். தன் சார்பாகவும், தங்கள் கட்சி சார்பாகவும் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. விழுப்புரத்தில் இருக்கும் மண்டபத்தை கொடுக்கிறாராம். இப்போது எவன் கல்யாணம் பண்ண போகிறான் . செலவு செய்யாமல் வெறும் வாய்பந்தலிலே ஆதாயம் தேடுபவர்

  • subraj - Madurai,இந்தியா

    மறுபடியும் மொத இருந்தா? முடியலடா சாமீ.....

Advertisement