Advertisement

30 பங்களாக்களை தானம் செய்த தொழிலதிபர்

கோல்கட்டா: மேற்கு வங்க தொழிலதிபர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு தனது 30 பங்களாக்களை அரசு பயன்படுத்தி கொள்ள தானம் அளித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஹர்ஷ்வர்தன் நியோடியா 'தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள தன்னுடைய 30 பங்களாக்களை கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்' என அறிவித்துள்ளார்.

'வைரஸ் பாதிப்புள்ளவர்களை தனிமைபடுத்த உள்ளிட்டவற்றுக்கு இந்த பங்களாக்களை பயன்படுத்தலாம்' என அவர் கூறியுள்ளார். அங்கு தூய்மைப் பணி மற்றும் உணவு வசதியையும் செய்வதாக அவர் அறிவித்துள்ளார். இதை மாநில அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (39)

 • spr - chennai,இந்தியா

  ஊரெல்லாம் வீடு வைத்திருக்கும் நம் சசிகலா, கருணாநிதி குடும்பத்தவர் என்ன கொடுப்பார் என்று கொடுப்பார் என்று எவரேனும் சொல்வார்களா

  • Hari - chennai,இந்தியா

   ஐயோ ஐயோ தான் மறைந்த பிறகு என்வீடு கோபாலபுரத்தில் உள்ளது அதை பொதுமக்கள் மருத்துவமனைக்கு எழுதி வைத்துவிட்டேன் என சொல்லி பலகோடிகள் மதிப்புள்ள மெரீனாவை கொள்ளை அடித்த குடும்பம் .மூலப்பத்திரம் இல்லாமலே கொள்ளை அடிக்கும் குடும்பம் எப்படியா தானம் செய்யும் ,உங்களிடம் செல்லாத காசு இருந்தால் அவர்களுக்கு இடுங்கள் வாங்கி கொள்வார்கள்.

 • B.s. Pillai - MUMBAI,இந்தியா

  Hats off to you, Sir. Not only you allotted your Bungalows, but taken responsibility to keep them clean and arrange food for the patients are too great. I pray that you and your family live longer. Similar announcements should fill up the news from leading cine actors , industrialists,and also from all corners.

 • Mano - Dammam,சவுதி அரேபியா

  மோடி அரசு கார்பொரேட் கம்பனிகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது என்று அரசியல்வாதிகள் பலரும் கூவி கூவிக்கொண்டு இருந்தார்களே, கொரோனவுக்காக நிவாரண நிதியை கோடி கோடியாக அவர்கள் தான் கொடுக்கிறார்கள். கூப்பாடு போட்டவர்கள் அரசாங்கம் அறிவிக்கும் இலவசத்தை வாங்க ரெடியாக கியூவில் நிற்கிறார்கள்.

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  அரசின் ஆதரவுடன் காலம் காலமாக கொள்ளையடித்துள்ளார்கள் . அரசுக்கு கொடுக்கிறார்கள் . தமிழகத்திலோ புதிய அரசு எப்போதும் ஆட்சியில் இல்லாத அரசு , ஆட்சி என்றால் என்ன என்றே தெரியாத ஒரு சில தலையாட்டி பொம்மைகளை கொண்ட அரசு உள்ளது . அதனால்தான் , இதுவரை யாரும் கொடுக்க முன்வரவில்லை . பல்லாயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடித்து வைத்துள்ள சசிகலா கும்பலையாவது அனுசரித்து போயிருந்தால் கொஞ்சம் வந்து சேர்ந்திருக்கும் . இப்போது அதுவும் இல்லை

 • Raja - Thoothukudi,இந்தியா

  குருமா, சோசப் விசய், சைகோ திக திமுக நாம் டம்ளர் போன்ற எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் கூட்டம் எல்லாம் வாய் திறக்காமல் இருக்கிறது. எங்க நம் கிட்ட கொரானாவுக்காக துட்டு கேட்டுருவாங்களோன்னு அமைதியாயிட்டாங்க.

Advertisement