Advertisement

என்ன செய்யலாம்! கொரோனா வைரஸ் தடுப்பு வழிமுறை ... ஏற்றுமதி நிறுவனத்தினர் யோசனை

Share
திருப்பூர் : பொதுமக்கள், தொழில்முனைவோர், கொரோனா தடுப்பு வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற யோசனை கூறுகிறார், திருப்பூர் ஆடை ஏற்றுமதியாளர்.

உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது, கொரோனா. வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடுமுழுவதும் வரும் 21ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவும் அமலில் உள்ளது.திருப்பூர் ஆடை தயாரிப்பு, ஜாப்ஒர்க் நிறுவனங்கள் அனைத்தும் இயக்கத்தை நிறுத்தியுள்ளன. வைரஸ் பரவலை தடுக்க, மங்கலம், வேட்டுவபாளையத்தில் உள்ள ஒரு ஆடை ஏற்றுமதி நிறுவனம் வைரஸ் தொற்றை தடுக்க சில வழிமுறைகளை தங்கள் தொழிலாளர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது.

அதன், விவரம் வருமாறு:தொழிலாளர் அனைவரும், ஒரு மீட்டர் இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். இருமல், தும்மும்போதும் முகத்தை மூடிக்கொள்ளவேண்டும்; அடிக்கடி கை கழுவ வேண்டும் உள்ளிட்ட வைர தொற்று தடுப்பு வழிமுறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.இதுதவிர, பிரத்யேகமாக சில வழிமுறைகளையும் பின்பற்ற அறிவுறுத்தியுள்ளோம். வீட்டுக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று, காய்கறி, மளிகை பொருட்கள், மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்கிவரவேண்டும்.

கொண்டுவரும் பொருட்களை வீட்டுக்கு வெளியே ஓரிடத்தில், கிருமி நாசினி தெளித்து, வைத்துவிட வேண்டும். வெளியே சென்று திரும்பிய நபர், உடனடியாக குளித்து விடவேண்டும். வெளியே வைக்கப்பட்ட பொருட்களை 24 மணி நேரத்துக்குப்பின், எடுத்து பயன்படுத்தலாம். நிறுவன நிர்வாகி ரஜேஷ் கூறியதாவது:எங்கள் நிறுவனத்தில், 70 தொழிலாளர் பணிபுரிகின்றனர். மூலப்பொருட்களை வாங்கி, சுயமாக கிருமிநாசினி திரவம் தயாரித்து, ஒவ்வொரு தொழிலாளருக்கும் தலா ஒரு லிட்டர் வீதம் இலவசமாக வழங்கியுள்ளோம்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை பயன்படுத்துவதை அதிகரிக்கலாம். தெரிந்த வர்த்தகர்களிடம் கடனுக்கு பொருட்கள் வாங்கலாம்; நிலவரம் சீரானபின் உரிய தொகையை வழங்கலாம்இந்த வழிமுறைகளை அனைத்து நிறுவனங்களும் பின்பற்றினால், கொரோனாவை எளிதில் விரட்டலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.'ஒதுங்கியிருக்க கத்துக்கணும்!'நெட்டிசன்கள், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வாசகங்களை உருவாக்கி, பரவச் செய்துவருகின்றனர்.

அந்தவகையில், நகைச்சுவையூட்டும்வகையிலான ஒரு விழிப்புணர்வு போஸ்டர், தற்போது வைரலாகி வருகிறது.கொரோனாவை வெல்வோம்' என்கிற தலைப்பில், அன்று, தொட்டால் பூமலரும்... இன்று, தொட்டால், நோய் பரவும்; அன்று ஒண்ணாயிருக்க கத்துக்கணும்... இன்று, ஒதுங்கி இருக்க கத்துக்கணும்... என்கிற வாசகங்கள் பொறித்த டிஜிட்டல் விழிப்புணர்வு போஸ்டர்கள், சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதனை பலரும் பகிர்ந்து, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Amirthalingam Sinniah - toronto,கனடா

    ஏகாந்தம் இனிது,இனிது என்று ஔவையார் அப்போதே கூறிவிட்டார்.

Advertisement