Advertisement

எச்சரிக்கை! மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ... மின்னணு அலாரம் அமைக்க மாசு கட்டுபாட்டு குழுமம்

புதுச்சேரி : வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் உள்ள மேல்நிலைநீர்தேக்க தொட்டிகளில் மின்னணு அலாரம் அமைக்காவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மாசுகட்டுப்பாட்டு குழுமம் எச்சரித்துள்ளது.

இது குறித்து புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டுக் குழும இயக்குனர் ஸ்மிதா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தேசிய பசுமை தீர்ப்பாயம் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களின் மேல்மாடியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் நிரம்பி வழியும் விலைமதிப்பற்ற நிலத்தடி நீர் வீணாவதற்கு கவலை தெரிவித்துள்ளது.

மத்திய நிலத்தடி நீர் ஆணையம், புதுச்சேரியை நிலத்தடி நீரை அதிகம் பயன்படுத்தும் மாநிலம் என வகைப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக நிலத்தடி நீரில் கடல் நீர் ஏற்கனவே ஊடுருவியுள்ளது. நிலத்தடி நீரை கவனமாக பயன்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையும், பொறுப்பும் ஆகும்.

எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி அனைத்து வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக கட்டடங்களில் உள்ள மேல்நிலை நீர் தொட்டிகளில் மின்னணு அலாரம் அமைப்பை வரும் ஏப்ரல் 20ம் தேதிக்குள் நிறுவ வேண்டும். தவறினால், கட்டடத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்படும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • venkat Iyer - nagai,இந்தியா

    புதுச்சேரி அரசு உடன் நடவடிக்கை எடுத்தால் நல்லது.

Advertisement