Advertisement

மூன்று வாரங்களில் சரியாகிவிடும் அதிபர் டிரம்ப் அதீத நம்பிக்கை

வாஷிங்டன், :அமெரிக்காவில், 'கொரோனா' வைரஸ் தொற்று, ஒரே நாளில், 10 ஆயிரம் பேருக்கு இருப்பது உறுதியாகி உள்ளது. பலி எண்ணிக்கையும், 800ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில், 'வரும், ஏப்., 12, ஈஸ்டர் தினத்துக்கு முன்பாக, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் இயல்புக்கு திரும்பும்' என, அதிபர், டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு, அமெரிக்காவில் மிக தீவிரமாக உள்ளது. நேற்று முன்தினம் மட்டும், 10 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும், ஒரே நாளில், 150 பேர் உயிரிழந்தனர்.
அங்கு, 54 ஆயிரத்து, 935 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. பலி எண்ணிக்கை, 784ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நியூயார்க் நகரில் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. அங்கு புதிதாக, 5,000 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மேலும், 53 பேர் பலியாயினர். அதையடுத்து, நியூயார்க்கில் மட்டும் பலி எண்ணிக்கை, 210ஆகவும், தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 25 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.
நியூயார்க்கைத் தவிர, அதை சுற்றியுள்ள நியூ ஜெர்சி, கலிபோர்னியா, மிச்சிகன், இல்லினாய்ஸ், புளோரிடாவிலும், வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ளது.
இந்தாண்டு இறுதியில், அதிபர் பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், மக்களிடையே டிரம்ப் மீதான நம்பிக்கை, 50 சதவீதமாக குறைந்துள்ளது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீட்டெடுத்து, அதன் மூலம், மக்கள் நம்பிக்கையை பெறும் முனைப்பில், டிரம்ப் உள்ளார்.
நேற்று முன்தினம் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது, டிரம்ப் கூறியுள்ளதாவது:
அனைத்து தரப்பு மக்களும், சமூக விலக்கலை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். வைரஸ் பரவலைத் தடுக்க கூறப்படும் அறிவுரைகளை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். கண்ணுக்கு தெரியாத எதிரியை வெல்வதற்கு அனைத்து தரப்பினரும் உதவ வேண்டும்.
இதற்காக, ஒரு இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வரும், ஏப்., 12ல், ஈஸ்டருக்கு முன்பாக, நாடு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் இயல்புக்கு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறேன். அதை செயல்படுத்தி காட்டினால், மிகப் பெரிய வரலாற்று வெற்றியாக அது அமையும். அடுத்து வரும், மூன்று வாரங்கள், நமக்கு முக்கியமானதாகும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


* புல்லட் வேகத்தில் பரவுகிறது

நியூயார்க் நகரில், வைரஸ் தொற்று மற்றும் உயிர் பலி அதிகரித்து வரும் நிலையில், நகர மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
'கொரோனா வைரஸ், புல்லட் ரயில் வேகத்தில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு மூன்று நாட்களிலும், பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது' என, நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரூ கியூமோ வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசால் நிறுவப்பட்டுள்ள, கொரோனா தடுப்பு நடவடிக்கைக் குழுவும், நியூயார்க்கில் வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவதற்கு கவலை தெரிவித்துள்ளது.* தலைவர்கள் அலட்சியம்
நாட்டின் பல பகுதிகளில், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சாலைகளில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அங்கும் அரசியல் தலைவர்கள், அலட்சியத்துடன் செயல்பட்டு வருகின்றனர். வெளியுறவு அமைச்சர், மைக் போம்பியோ, தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார்.அனைத்து, உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டுள்ளன. கண் மருத்துவரும், செனட், எம்.பி.,யுமான ராண்ட் பால், பார்லி.,யில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில், உடற்பயிற்சி மேற்கொண்டார்.


சமூக விலக்கலை கடைப்பிடிக்க மக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அதிபர் டொனால்டு டிரம்ப், பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது, மேடையில், அதிகாரிகள் குவிந்திருக்கின்றனர். அதேபோல், அதிகாரிகளுடன், டிரம்ப் கைகுலுக்கி வாழ்த்து கூறியுள்ளார்.
பிரசாரத்துக்கு பயன்படுத்தினார்அதிபரின் வெள்ளை மாளிகையில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்புகளில், டிரம்ப் அதிகம் பங்கேற்க மாட்டார். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. தினமும், பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, மணிக் கணக்கில் விளக்கி வருகிறார்.'நான்கு ஆண்டுகளுக்கு முன், தேர்தல் பிரசாரத்தின்போது பேசியதைப் போல, தற்போது அவர், இந்த பத்திரிகையாளர் சந்திப்புகளை பயன்படுத்தி வருகிறார். பாதிப்பை தடுக்க அரசு தீவிரமாக இருப்பதாக காட்டுவதற்காக, அவர் பொய் தகவல்களை கூறி வருகிறார். முக்கியமான சில தகவல்களை மறைக்கிறார்' என, அமெரிக்க பத்திரிகையாளர்கள் கூறி வருகின்றனர். அதனால், இணையதளங்களில் இருந்தே, மக்கள் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.உடன்பாடு ஏற்பட்டதுவைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை ஈடு செய்யும் வகையில், 140 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள மீட்பு நடவடிக்கைகளை, டிரம்ப் நிர்வாகம் தயாரித்துள்ளது. ஆனால், இதற்கு, பார்லியில், ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில், செனட் சபையின் இரண்டு கட்சிகளின் தலைவர்களுடன், வெள்ளை மாளிகை அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.3 வீரர்களுக்கு தொற்றுஅமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பலில் பணியாற்றும், மூன்று கடற்படை வீரர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. கடற்படை வீரர்களுக்கு பாதிப்பு இருப்பது முதல் முறையாக உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த வீரர்கள், மருத்துவமனைகளில் தனிமைபடுத்தப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மொத்தம், 5,000 பேர் உள்ள அந்தக் கப்பலில், இந்த வீரர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement