Advertisement

பாக்.,கில் 1,000 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி

இஸ்லாமாபாத் :நம் அண்டை நாடான, பாகிஸ்தானில், 'கொரோனா' வைரஸ் தொற்று உள்ளோர் எண்ணிக்கை, ஆயிரத்தை எட்டியது. அதையடுத்து, உள்ளூர் விமான சேவை முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை, ஏழு பேர் பலியாகி உள்ளனர். அண்டை நாடான ஈரானுக்கு யாத்திரை சென்றவர்களால் தான், இந்த வைரஸ், பாகிஸ்தானில் வேகமாக பரவியது. தற்போது, வெளிநாடு செல்லாதவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.சிந்து மாகாணத்தில்தான் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அங்கு, 400 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அதற்கடுத்து, பஞ்சாப் மாகாணத்தில், 296 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது.ஏற்கனவே, உள்நாட்டு ரயில் சேவை முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான சேவையும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், உள்நாட்டு விமான சேவையும் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் வகையில், 9,500 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை, பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement