Advertisement

வந்தாச்சு ஹன்டா சீனாவில் அடுத்த பீதி

பீஜிங், சீனாவில் 'கொரோனா' பீதி ஓரளவு அடங்கி உள்ள நிலையில் 'ஹன்டா வைரஸ்' தாக்குதலுக்கு ஒருவர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சீனாவின் கிழக்கு ஷாங்டாங் மாகாணத்தை சேர்ந்த நபர் பணியில் இருந்து வீடு திரும்பும் போது திடீரென உயிரிழந்தார். இவர் 'ஹன்டா வைரஸ்' என்ற தொற்று தாக்கி பலியானது தெரியவந்தது. இதையடுத்து இவருடன் பஸ்சில் பயணம் செய்த 32 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.'ஹன்டா வைரஸ்' என்றால் என்ன'ஹன்டா வைரஸ்' என்பது எலி, முள்ளம்பன்றி, அணில் போன்ற ஊர்வன இனத்தை சேர்ந்த விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்தது.
எப்படி பரவுகிறதுவைரசால் பாதிக்கப்பட்ட விலங்குகளின் சிறுநீர், எச்சில் மூலம் இது மனிதர்களுக்கு பரவுகிறது.ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுவதில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.அறிகுறிகள் என்னதலைசுற்றல், காய்ச்சல், தொடை, இடுப்பு மற்றும் தோள்பட்டைகளில் வலி, தலைவலி, வாந்தி மற்றும் பேதி ஆகியவை ஆரம்ப அறிகுறிகளாக கூறப்படுகிறது.நோய் முற்றிய நிலையில் கடுமையான இருமல் மற்றும் மூச்சு திணறல் ஏற்படும் என கூறப்படுகிறது.உயிருக்கு ஆபத்தாஹன்டா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் 38 சதவீதம் மரணம் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement