Advertisement

முழு அடைப்பு அறிவித்த இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

Share
நியூயார்க்:'இந்தியா முழுவதும், 21 நாட்கள் முழுமையான ஊரடங்கிற்கு உத்தரவிட்டதன் மூலம், கொரோனாவுக்கு எதிரான போரில், விரிவான மற்றும் வலுவான நடவடிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி, முன்னெடுத்துள்ளார். 'இந்த போரை வெல்ல, இந்தியாவுடன், ஐ.நா., என்றும் துணை நிற்கும்' என, உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

நடவடிக்கை



கொரோனா தொற்றுக்கு, உலகம் முழுவதும் உள்ள, 165 நாடுகளில், 4 லட்சத்து, 22 ஆயிரத்து, 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில், 562 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்பது பேர் பலியாகி உள்ளனர். இந் நிலையில், வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று முன் தினம் நள்ளிரவு, 12:00 மணி முதல், 21 நாட்களுக்கு, நாடு முழுவதும், முழுமையாக மூடப்படுவதாக, பிரதமர் மோடி அறிவித்தார்.

இது குறித்து, ஐ.நா.,வின் சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியாவுக்கான பிரதிநிதி ஹெங்க் பெக்டேம் கூறியதாவது:இந்தியாவில், கொரோனா பரவலை தடுப்பதற்காக, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது; பரிசோதனை கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட்டுள்ளது.தனிமைபடுத்தும் நடவடிக்கை அதிகரித்துள்ளது; மக்கள் ஒருவருக்கொருவர் விலகி இருக்கும் நடவடிக்கையாக, 21 நாட்களுக்கு, நாடு முழுவதும் ஊரடங்கிற்கு, பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இதற்கு, மக்கள் மத்தியில், பலத்த ஆதரவு பெருகி வருகிறது.


இந்த நடவடிக்கை, தொற்று பரவலை, நிச்சயம் கட்டுப்படுத்தும். கொரோனா போர்நோய் கண்காணிப்பு, பரிசோதனை மற்றும் ஆராய்ச்சிப் பணிகள், தொற்று தவிர்ப்பு மற்றும் பயிற்சி உள்ளிட்ட பணிகளில், இந்தியாவுடன் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நா., இணைந்து செயல்பட்டு வருகிறது.கொரோனாவுக்கு எதிரான போரில், பிரதமர் மோடி, விரிவான மற்றும் வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தப் போரில் வெல்ல, இந்தியாவுக்கு, ஐ.நா., உறுதுணையாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நடந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்



அமெரிக்காவின் நியூயார்க் நகரம், முழுமையாக மூடப்பட்டுள்ளதை அடுத்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம், வரலாற்றில் முதல் முறையாக, 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில், நேற்று முன் தினம் நடந்தது. இந்த கூட்டத்தில், மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நான்கு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டம், தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, அடிக்கடி தடைபட்டது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (7)

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    தெரிஞ்சு பொய் சொல்றாங்களா? தகவல் தெரியாம உளறுறாங்களா? கோவில்கள் மட்டும்தான் இவாக்குவேட் செஞ்சு மூடியிருக்காங்க. மஜூதி & சர்ச்சு வளாகங்கள் எப்பவும் போல்தான் இருக்கு. இது ஏன் உலக கவனத்துக்கு போகலை? முளு அடைப்பாமே ... முளு அடைப்பு ...

  • ஆப்பு -

    ஐயா உலக சுகாதார நிறுவனமே உங்க பங்குக்கு ஒரு 10000 போலூசை லத்தியோட அனுப்பி வையுங்க. இங்கே லத்தியால பேசுனாத்தான் கேக்குறாங்க. அப்பிடியே தெலங்காணாவுக்கு ஒரு ஆயிரம் போலூசை அனுப்புங்க...வெளியே வர்ரவங்களை சுட்டுத்தள்ள...

  • ஆப்பு -

    ஐயா உலக சுகாதார நிறுவனமே உங்க பங்குக்கு ஒரு 10000 போலூசை லத்தியோட அனுப்பி வையுங்க. இங்கே லத்தியால பேசுனாத்தான் கேக்குறாங்க. அப்பிடியே தெலங்காணாவுக்கு ஒரு ஆயிரம் போலூசை அனுப்புங்க...வெளியே வர்ரவங்களை சுட்டுத்தள்ள...

  • aryajaffna - Zurich,சுவிட்சர்லாந்து

    ஹஹஹஹ , இனிதான் இருக்க உங்களுக்கு

  • ஆப்பு -

    கொரோனாவை முடக்கியதோடு, ஏற்கனவே முடங்கிய பொருளாதாரத்தயும் மொத்தமா முடக்கிடலாம்.

Advertisement