Advertisement

கொரோனா எண்ணிக்கை 612.. 21 நாளில் வெல்வோம்: பிரதமர் உறுதி

புதுடில்லி: நாட்டில், 'கொரோனா' வைரஸ் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை, 612 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில், முதல் பலி நேற்று பதிவான நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு, அதிகபட்சமாக, மஹாராஷ்டிராவில், 116 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில், 109 பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தம் 612 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதில், 40 பேர் குணமடைந்துவிட்டனர். 562 பேர், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தின் முதல் கொரோனா பலி, மதுரை மாவட்டத்தில், நேற்று பதிவானது. இதையடுத்து, நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.மேலும், மஹா.,வில் பதிவான மூன்றாவது பலியும், டில்லியில் பதிவான இரண்டாவது பலியும், கொரோனா தொற்றால் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.பிரதமர், நரேந்திர மோடி, வாரணாசி தொகுதி மக்களுக்காக, நேற்று, 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:கொரோனா வைரசுக்கு, ஏழை - பணக்காரன் பேதம் கிடையாது. சமூக விலகலும், வீட்டுக்குள்ளேயே 21 நாட்கள் இருப்பதும் மட்டுமே, கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த ஒரே தீர்வு.மஹாபாரத போரை வெல்ல, 18 நாட்கள் ஆனது. கொரோனாவுக்கு எதிரான போரை, வெல்ல 21 நாட்கள் தேவை.இவ்வாறு அவர் கூறினார்.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், மூன்று உணவகங்களை நடத்தி வந்த சமையல் கலை நிபுணர் ப்ளாய்ட் கார்டோஸ், கொரோனா தொற்றுக்கு நேற்று பலியானார். அமெரிக்காவின் நியூயார்க் நகர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ப்ளாய்ட், சிகிச்சை பலனின்றி, நேற்று உயிரிழந்தார். மத்திய பிரதேசத்தில், ஒரு பெண், கொரோனா தொற்றுக்கு நேற்று பலியானார். இது, அம்மாநிலத்தின் முதல் பலியாக கருதப்படுகிறது.

நாடு முழுவதும், 21 நாட்கள் மூடப்பட்டுள்ளதை அடுத்து, ஏழை மக்களும், தினக் கூலிகளும், கடுமையாக பாதிக்கப்படுவர். இவர்களது வங்கி கணக்கில், நேரடியாக உதவி தொகை, 'டிபாசிட்' செய்யப்பட வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், நாடு முழுவதும், பெரும் குழப்பங்களும், பாதிப்பும் ஏற்படும். அதே போல, இந்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு, வரி விலக்குகள் மற்றும் நிதி உதவிகள் அறிவிக்கப்பட வேண்டும்.

ராகுல், லோக்சபா எம்.பி., - காங்.,
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (7 + 19)

 • ஆப்பு -

  இன்னிய ஸ்கோர் 649/20.

 • ஆப்பு -

  ஆமாம்... இவுரும் இவரோட சகாக்களும் தான் மட்டும் தான் வேலை பாக்கலாம். இவிங்க செய்யறதுதான் வேலை. மக்கள் செய்யறதெல்லாம் வெட்டி வேலை.

 • THAYALAN - CHENNAI,இந்தியா

  இதே கருத்தை அமெரிக்க அதிபர் திரு. டிரம்ப் சொல்லியிருக்கிறார். ஆனால் அவரை கிண்டல் செய்யும் பாணியில் "மூன்று வாரங்களில் சரியாகிவிடும் அதிபர் டிரம்ப் அதீத நம்பிக்கை" என்று....

 • ஆப்பு -

  என்னுடைய கணிப்பு.. இன்னும் 10 நாளைக்கு க்கூட ஊரடங்கு உத்தரவு தாங்காது. வெற்றி வெற்றின்னு முழங்கி மாமூல் நிலமைக்கு வந்துரும்.

 • Yezdi K Damo - Chennai,இந்தியா

  கொரோனா வைரஸை அழிக்க மருந்து கண்டு பிடித்தால் ஒழிய அதை வெல்ல முடியாது .

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம்: பிரதமர் (19)

 • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

  நாட்டில் நடந்த நல்ல காரியம் இந்த ஊரடங்கு. அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு கொடுத்தால்தான், நல்ல காரியங்கள் செய்ய அரசுக்கு எண்ணம் வரும். God Bless India.

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  இது மக்களின் போர், மக்களுக்கான போர் இதன் வெற்றி மக்களின் வெற்றி, வேறு யாரும் உரிமை கொண்டாட முடியாது

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா

   ஆமாம் ஆமாம் அதனால் தான் இந்தோனேஷியாவில் இருந்து சரக்கை இறக்கி பரப்புகிறோம் அதனால் இது முழுதும் எங்களுக்கே சொந்தம்

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியாவை இத்தகைய நடவடிக்கையை மிஸ் பண்ணுகிறோம் நாங்க ??? நீங்களாவது பத்திரமாக இருங்க ???

 • ஆப்பு -

  என்ன ஆனாலும் வெற்றின்னு சொல்லிக்க உங்களை மிஞ்ச முடியுமா? அதுவும் 130 கோடி மக்களின் வெற்றின்னு சொல்லிருவிங்களே... இருந்தாலும் கொரோனா சில ஆயிரம் பேர்ககை காவு வாங்கிட்டுத்தான் போகும்.

  • nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு

   உள்ளிருந்தே காட்டி கொடுப்பதற்கு என்ன பெயர்

 • chenar - paris,பிரான்ஸ்

  உங்களுக்கு இந்த நேரத்தில் அனைவரும் உறுதுணையாய் இருப்போம் மேலும் தீவிரமாக நடவடிக்கை எடுங்கள்

 • mohankumar - Trichy,இந்தியா

  அரசு இன்னமும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் . எல்லாரும் வெளியே சுற்றுகிறார்கள்

 • Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்று உலகத்திற்கு முன் உதாரணமாக மாறுங்க மக்களே, ஏளனமாக நம்மை பார்க்கும் வெஸ்டர்ன் ,லிபேரல் குரூப்புக்கு இந்தியா எதையும் சாதிக்கும் திறன் உடையது என்று நிரூபிங்க ???ஆத்திரம் பிடித்தவங்க போனவாரம் வரை இந்தியாவில் பாதிப்பு பெரிசா இருக்கும் என்று கட்டுரை எழுதி கொண்டு இருந்தானுங்க ,இன்னிக்கு மோடி அரசு நாட்டை அடைத்து சூதாட்டம் ஆடுகிறது என்று பரப்புகிறார்கள்??? திருந்த வே மாட்டானுங்க இவெங்க??? சும்மா நீங்க வீட்டில் இருந்தால் போதும் இதை விட எளிய டாஸ்க் எதுவும் இல்லை

 • mohankumar - Trichy,இந்தியா

  முதல்வரே இவனுங்க எங்கே கேட்கிறானுங்க எல்லாரும் வெளியே சுத்திகிட்டு இருக்கானுங்க . ஆந்திர முதல்வர் சொல்வது போல் சுட்டு தள்ள உத்தரவு கொடுங்கள் . இவனுக்கு திருந்த மாட்டானுங்க

 • E Mariappan -

  இரு தரப்பிலும் உள்ள அறிவாளிகள் நீங்கள் சண்டை போடுவதற்கு இது தருணம் அல்ல. ஒவ்வொரு இந்தியனின் உயிரை காப்பாற்ற அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு துணை நிற்க வேண்டும்

 • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

  திமுக தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தன்னுடைய திறமையை காட்டி உள்ளார். எப்படி அதிமுக சரியான திட்டமிடலுடன் செயல்படுகிறதோ அதேபோல் திமுகவும் கொரோனாவிற்கு எதிராக சரியாக செயல்படுகிறது. ஒரு எதிர்க்கட்சியாக அரசை எப்படி எல்லாம் வழி நடத்த முடியுமோ அப்படி எல்லாம் தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வழி நடத்தி வருகிறார். இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம். முதலில் தமிழகத்தில் லாக் டவுன் கொண்டு வர வேண்டும் என்று கூறியது திமுகதான். சட்டமன்ற கூட்டத் தொடரை நிறுத்திவிட்டு, எம்எல்ஏக்களை மக்கள் பணி செய்ய அனுப்ப வேண்டும் என்று கூறியது ஸ்டாலின்தான். மக்களை வீட்டிற்குள் அடைக்க வேண்டும், அதே சமயம் அவர்களுக்கான உதவிகளை செய்ய வேண்டும் என்றதும் திமுகதான். மக்களுக்கான பொருளாதார தேவை குறித்து பேசியது ஸ்டாலின்தான். மிக முக்கியமான மருத்துவமனை நிலை, அதை தயார் செய்வது குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின்தான் முதல் ஆளாக பேசினார். கொரோனா, 144 தடை ஆகிய சூழலில் வெளியூர்வாசிகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்காமல் மக்களை சாலையில் நிறுத்தியிருக்கிறது அரசு. பேருந்துகளைக் குறைத்தால் எப்படி ஊருக்குச் செல்வார்கள் என்கிற எண்ணம் கூடவா இல்லை? உடனே பேருந்துகளை அதிகரித்து, மக்களுக்கு இலவச பயணத்தை அனுமதிக்க வேண்டும், என்று கூறினார். கூட்டம் அதிகம் ஆனால் கொரோனா பரவும் என்பதால் அப்படி கூறினார்.

  • RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ

   உண்மை தான் நேற்று வரை சட்டசபை நடந்து உள்ளது இன்று தான் முதல்வர் 4000 கோடி தேவை என்று இன்று தான் கடிதம் இதை போனவாரம் கேரளா டேலி தெலிங்கனா என்று தொடங்கிவிட்டார்கள் நீங்கள் இன்று தான் அஸ்ஸஸ்ட்மென்ட் , பாருங்கள் 2 நாளில் 3.70 லட்சம் சென்னைவாசிகள் வெளியூர் பயணம் இப்படி எல்லாமே லேட்டா தான்

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  நோய் தாக்கினாலும் பாதிக்கப்படப் போவது பல லச்சக்கணக்கான மக்கள் . அதை தடுப்பதற்காகவும் பாதிக்கப்படப்போவதும் மக்கள், பல கோடிக்கணக்கான மக்கள் . இவ்வளவு பெரிய கொடுமைகளை வைத்தும் மீன்பிடிக்கும் கூட்டம், மோடி அரசை மட்டுமல்ல உலக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டுள்ளது, மிரட்டிக்கொண்டுள்ளது. இந்த வியாதிக்கு மூல காரணம் மற்றநாடு (சீனா ) என்றால் , அதைவைத்து அரசுகளை மிரட்டும் அதைவிட கொடூரமான கும்பல்கள் அந்தந்த நாடுகளிலேயே உள்ளன . அதுவும், எப்போதும் போல், இப்போதும் உலக நாடுகளையே மிரட்டி ராஜாங்கம் செய்யும் குமபல், பொருளாதார சந்தை என்ற பெயரில் சுதந்திரமாக உலா வருகின்றன . மக்களை பணத்தை , அரசு பணத்தை மிரட்டி பறித்துக்கொண்டு செல்கின்றன . அதுவும் அரசையே மிரட்டி , சட்டப்படி கொள்ளையடித்து, சட்டப்படி மீண்டும் மீண்டும் கொள்ளையடித்ததை முதலீடுகள் செய்து நாட்டுக்கும் மக்களுக்கும் சிம்ம சொப்பனமாக திரிகின்றன. இந்த வியாதிகளால் ஏற்படும் விளைவுகள் , பாதிப்புகளை விட சந்தையில் உள்ள கும்பல்களால் ஏற்படுவது எண்ணிலடங்காதது , கணக்கிடமுடியாதது . உலகிற்கே முன்னோடியாக, இப்போதே , நாடுதழுவிய lockdown -ஐ காரணம் காட்டியாவது பொருளாதார சந்தைகளை ஒழிக்க வேண்டும். குறைந்தபட்சம், இந்த நோயின் தாக்கம் சீராகும் வரை சந்தைகளை மூடவேண்டும் . அப்போதுதான், நோயால் பாதிக்கப்பட்ட பல லச்சக்கணக்கானோருக்கு அல்லது நோயை தடுப்பதர்கான நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கோடி மக்களுக்கு உரிய பலன் கிடைக்கும் . இல்லையெனில் அரசும், அதில் உள்ளவர்களும் பட்டை நாமத்தை போட்டுக்கொண்டு சிவ சிவா, ராம ராமா , சாமியே சரணம் , என்று பந்தாவாக வேஷம் போட்டுக்கொண்டுஉலகை சுற்றிவரவேண்டியதுதான் .

 • சீனு, கூடுவாஞ்சேரி -

  நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள். கொரானாவை விட கொடிய தேசவிரோத கூட்டத்தை வெகு லகுவாக கடந்த பதினைந்து ஆண்டுகளாக அழத்தவர் அல்லவா நீங்கள். வெற்றி இந்தியர்களுக்கே. ஜெய் ஹிந்த்.

  • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு

   மக்கள் வீட்டில் இருந்து அவர்கள் உயிரை காப்பற்றி கொள்ளவேண்டும் என்று மஸ்தான் சொன்னார் நீ உயிருடன் இருக்கணும் என்றால் மோடி காப்பாத்துவார் அவருக்கு வெற்றி கிடைக்கும் என்று வெளியே சுற்ற கூடாது சொம்புக்கு அளவே இல்லை

 • ஆப்பு -

  21 நாளக்கி வீட்டுக்கு தேவையான சாமானெல்லாம் ஸ்டாக் வெச்சாச்சு போலிருக்கு.

 • Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்

  போர் தொடுத்தது யாரென்று தெரியாமல் , எப்படி வெற்றி கிடைக்கும்?. இவையனைத்திற்கும் காரணம் உலக பொருளாதாரத்தின் ஊற்றுக்கண் சீனாவில் உள்ள வுகாண் . இது மற்ற நாடுகளுக்கு மிக விரைவாக பரவுவதற்கு காரணம் உலக மயமாக்கல் , தாராளமயமாக்கல் . இதையெல்லாம் ஒழிக்காமல் அல்லது கட்டுக்குள் கொண்டுவரமுடியாமல் கிடைக்கும் வெற்றி, நிரந்தரமாக இருக்காது . அப்படியில்லையெனில் இதற்கெல்லாம் காரணம் யார் என்பதையாவது கண்டுபிடிக்கவேண்டும் .

 • ஆப்பு -

  //யோகா, உடற்பயிற்சி செய்தாலும் விடாது// நல்லது. இதை உ.பி யோகியாருக்கு சொல்லவும். அதே போல் கோமியபானம் பயன் தராதுன்னு உ.பி ஆளுங்க கிட்டே சொல்லவும்.

Advertisement