LOGIN
dinamalar telegram
Advertisement

தமிழக போலீசார் கையில் எதற்கு,லத்தி?

Share

'கொரோனா' தொற்றை தடுக்க, நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில், போலீசாரின் கெடுபிடி அமலாகி உள்ளது. வேடிக்கை பார்க்க கிளம்புவோரிடம் காட்ட வேண்டிய கெடுபிடியை, சாமானியர்கள் மீதும், பொதுச்சேவை செய்யச் செல்வோர் மீதும், நாளிதழ்களை வினியோகிக்கும் இளைஞர்கள் மீதும், போலீசார் அமல்படுத்துகின்றனர்.

 

Home வாசகர் கருத்து (125)

 • Raja - Thoothukudi,இந்தியா

  காவல்துறை அன்பர்களே. உங்கள் பணியைகடமையை பாராட்டுகிறோம். ஆனால் பாத்து அடிங்க. அடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அடி உதவுவதுபோல் அண்ணன்தம்பி உதவமாட்டான் என்று தமிழன்தான் சொல்லியிருக்கான். அதனால் தாராளமாக அடிங்க. தப்பு பண்றவங்கள பாத்து அடிங்க. கோவில்கள் சர்ச்கள் பூட்டி இருக்கும்போது மசுதில தொழுகை நடத்த வெளிநாட்டு ஆசாமிகளைஇறக்குமதி பண்றாங்க. அவங்களுக்கு தர்ம அடி கொடுத்தீங்களா? தெரிஞ்சே சட்டத்தை மதிக்காதவங்களிடம் தயவுதாட்சண்யம் பாக்காதீங்க.

 • meenakshisundaram - bangalore,இந்தியா

  தினமலர் இந்த மாதிரி செயதி வெளியிடுவது பத்திரிகை தர்மம் அல்ல ,கொஞ்சம் பொறுப்பு வேண்டும்,வேறு பத்திரிகைகள் இந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக உள்ளன .

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  ஊரடங்கு என்றால் காஸ் க்கே ல்லாம் என்ன தெரியும் அதுபாட்டுக்கு தீந்துபோவுதே இதுக்கெல்லாம் கூட தடி அடி

 • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

  இப்படி ஜனநாயகம் வேண்டுமென்றால் அனைவரும் உயிரோடு இருக்க வேண்டும். அதற்க்கு இந்த போலீஸ் அணுகுமுறை சரியானதே இல்லையென்றால் இந்நாடு இன்னொரு இத்தாலியாக மாறும்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  ஓராண்டு உத்திரவு என்பது பல காலம் இல்லாததால் அது எப்படி இருக்கும். அத்தருணத்தில் செய்யவேண்டியது என்ன? மக்களின் கடைமை என்ன என்று மாவட்ட ஆட்சியரின் நிர்வாகமும் விளக்கவில்லை, காவல்துறையும் சொல்லவில்லை. கண்ணியம் காற்றோடு போகிறது காவல் துறை. பிரம்பு வைத்து அடிப்பதற்கா இவர்களுக்கு அது. ஊரில் ஒரு திருடர்களை பிடிக்க அவர்களிடமிருந்து மக்களுக்கு பாதுகாப்பை தருவதற்கு, ரௌடிகளை ஒடுக்குவதில் இருக்கவேண்டும் இவர்களின் வீரம். எந்த ரவுடிகளை இவர்கள் விரட்டி பிடித்தார்கள். லத்திசார்ஜ் செய்தால் அதை கண்டே வண்டியை வேகமாக ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகம் நிகழ வாய்ப்புக்கள் அதிகமல்லவா? பொது அறிவு கூடவா இல்லை இவர்களுக்கு? தோப்புக்கரணம் இடவேண்டுமாம். இது எதெற்கு ? அதில் மாற்று மதத்தினர் யாரவது பிரச்சினைகளை உண்டாக்கினால்? அது கூடவா சிந்திக்க மாட்டார்கள் இவர்கள். ரோந்து வாகனங்கள் ஒலிபெருக்கி மூலம் வீதி தோறும் ஊரடங்கு பேட்டரி விளக்கலாமே? எதோ எமெர்ஜென்ஸிக்கு காத்திருந்தவர்கள் போல உடனே தேடியெடுத்து விடுகிறார்கள். கொரானாவிற்கு எதிராக இவர்களின் அடக்குமுறை சரியாக இருக்கும் ஆகவே நாங்கள் அப்படி செய்கிறோம் மக்கள் நலனிற்காக நாங்கள் வில்லன் போல் செயல்படவேண்டி இருக்கிறது என்று ஒரு நொண்டி சாக்கு வேறு இவர்களுக்கு? ஒருவரும் கொரோன தடுப்பு உபகரணங்களை வைத்திருக்கவில்லை. தெருவில் கிடைக்கும் பிளாஸ்டிக் பைப்பை எடுத்து கொண்டு ஒருவரை தாக்க வேண்டியது. பைக் சாவியை பிடுங்க வேண்டியது. கைகளால் அவர்களை தர தர வென்று இழுத்து வண்டியிலிருந்து தள்ளவேண்டியது. வண்டியை ஓரமாக ஒதுக்க சொல்லி ஒரு பத்து பதினைந்து பஞ்சர் செய்து விட்டால் போதும். வண்டியை ஊரடங்கு முடியும் வரை எடுக்க முடியாதல்லவா? ஏழை ரிக்ஸா தொழிலாளி, ஒருவரை ஏற்றி செல்கிறார். முதியவர். அவரை பார்த்தாலே தெரிகிறது, அன்றைய உணவிற்காக ஜீவனத்திற்காக உழைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. அவரிடம் கூடவா உங்கள் வீரம். காவல் துறைக்கு அதிக கட்டுப்படும் கண்ணியமும் வேண்டும். அவர்களின் கடைமை எது என்றும் எது அவர்களின் கடைமையை உரிமையில் இல்லை என்பதை புகட்ட வேண்டியது அரசின் கடைமை. உலகளாவிய பயமுறுத்தும் தோற்று வியாதிக்கு எதிராக ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டிய தருணத்தில், காவல் துறை பின்னுக்கு சென்று கொண்டிருக்கிறது. இது நல்லதற்கு அல்ல. சீரமைக்கப்படவேண்டிய துறையில் இவர்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள் என்றே எடுத்து கொள்ளவேண்டும்.

Advertisement