Advertisement

ஒன்று முதல் 9 வரை, ஆல் பாஸ் : முதல்வர் அறிவிப்பு

சென்னை : 'தமிழகத்தில், பள்ளி மாணவர்களுக்கு, தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை உள்ளதால், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி செய்யப்படுவர்' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்து உள்ளார். கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுக்க, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுத்து வருகிறது. நேற்று முன்தினம் முதல், மாநிலம் முழுவதும், 144 தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

உத்தரவுஇதுதொடர்பான ஆய்வு கூட்டம், நேற்று சென்னையில், முதல்வர் வீட்டில், அவரது தலைமையில் நடந்தது. தலைமை செயலர், சண்முகம், டி.ஜி.பி., திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர், தீரஜ்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, முதல்வர் வெளியிட்ட அறிக்கை:கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து பள்ளிகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டு, இன்று வரை அமலில் உள்ளது. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர்கள், இறுதி தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மாணவர்கள் நலன் கருதி, ஒன்று வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களும், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க, பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.டீக்கடை மூடல்இந்நிலையில், டீ கடைகள் திறக்க, ஏற்கனவே அரசு அனுமதி அளித்திருந்தது.


அதன்படி, தமிழகத்தில் பல இடங்களில், டீக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால், நேற்று முன்தினம், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால், டீக்கடைகளையும் மூட, நேற்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இது குறித்து, அரசு கூறியுள்ளதாவது:அனைத்து டீ கடைகளையும், நேற்று மாலை, 6:00 மணிக்குள் மூட வேண்டும்.

அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, ரேஷன் பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை, நேரடியாக வீட்டிற்கே சென்று வழங்கலாம். மேலும், அனைத்து மளிகை, காய்கறி கடைகளில், அரசின் வழிகாட்டுதல்படி, சமுதாய இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும். உணவகங்களில் இருந்து, வீட்டிற்கு உணவு வினியோகிக்கும் நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுபோன்ற அரசின் வழிகாட்டுதல்களை, மக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு, அரசு கூறியுள்ளது.

புதுச்சேரியிலும், 'ஆல்பாஸ்'புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் ருத்ர கவுடு செய்திக்குறிப்பு:கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும், ஏப்ரல், 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனால், பள்ளி ஆண்டு இறுதி தேர்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 1ம் வகுப்பில் இருந்து, 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (5 + 11)

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  NAANELLAM படிக்கும்போது அஞ்சாம் வகுப்புலேந்து 10ம் வகுப்புவரை வாராந்திர தேர்வு மாசம் முடிவிலே தேர்வு தவிர காலாண்டு அரையாண்டு முழுஆண்டு தேர்வுகள் வரும் பிடிச்சதை டெஸ்ட் பண்ணுவாங்க முதல் அஞ்சு ரேங்க் வரை மார்க்கெடுக்க போட்டிபோடுவோம் எங்கள் அரசு பள்ளியில் ஆசிரியர்களெல்லாரும் அவ்ளோ சிரததையுடன் கர்ப்பிப்பாங்க இன்றும் இந்தமுதுமை லேயும் எங்கள் டீச்சர்ஸ் ஐ நியாபகம் வச்சுண்டுருக்கோம் .,அன்றுபோல டீச்சிங் இன்று இருக்கான்னுதெரியலே , படிக்குறப்பசங்க நன்னப்படிக்குறாங்க என்பதும் உண்மை இப்போதுபோல இல்லீங்க அன்று மேக்சிமம் 95 %தான் பார்த்தோம் இன்று 100%அள்ளிபோடுறாங்களே எவ்ளோநிறைய மார்க்ஸ் வாங்கினாலும் GK ரொம்பவேகம்மா எல்லா சப்ஜெக்ட்டுக்கும் டியூஷன் போறாங்க பிள்ளைங்க சில பெரிய பள்ளிகளில் காம்பாள்சரியாவே இருக்கு டியூஷன் மார்க்ஸ் போடுறதுலேயும்பலகோல்மால்கள் இருக்கு இன்று தரம் அந்தரத்துலே தொங்குது ரேங்க் லே பாஸ் பண்ணியும் பல பிள்ளைகள் CA இண்டெர்லே உசிரைக்கொடுத்துபடிச்சாலும் வெற்றிபெறவேமுடியலே பாவம் அப்படி வடிகட்டி நன்னப்படிக்கும்பிள்ளைகளின் தலையே மண்ணைபோடுறாங்க கேவலமான விஷயம்எங்கேயும் எதுலேயும் லஞ்சம் தான் தேவை நாசமாப்போக தகுதிக்கு இல்லே மதிப்பு

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  சித்தம் போக்கு சிவம் போக்கு. முந்தாநாள் வரை அஞ்சாப்பு, எட்டாப்புக்கு பொதுத் தேர்வுன்னு குரங்குப்பிடி. இன்னைக்கி ஒம்பதாப்பு வரை ஆல் பாஸ்.

 • RajanRajan - kerala,இந்தியா

  அப்போ அண்ணனுக்கு என்னிக்கு கொரானாவுலே ஆல் பாஸ் போடுவீங்கப்பா

 • ஆப்பு -

  தவறு. 10 வது முதல் கல்லூரி தேர்வுகள் எல்லாத்தையும் ரத்து செஞ்சு ஆல்பாஸ் போடணும்.படிச்சுட்டு வந்தா வேலையா கிடைக்கப் போகுது? டி.என்.பி.எஸ் சில சித்தாண்டி மாதிரி ஒரு ஆளைப் புடிச்சாத்தான் வேலைன்னு ஆயிடுச்சு.

 • blocked user - blocked,மயோட்

  ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகளே கூட வேண்டாம். ஆசிரியர் வேண்டாம். நிதி வேண்டாம்... அது ஏன் படிக்கவே வேண்டாம்... தமிழகத்தின் ஆணி வேரையே அசைக்கிறார்கள்... அக்கிரமமான கண்டனத்துக்கு உடைய முடிவு.

9ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி: முதல்வர் அறிவிப்பு (11)

 • R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா

  எது CBSE,CBSC பள்ளிக்கூடம் எது Military campus/Police பள்ளிக்கூடம் என்று தெரியாமல் சில பள்ளிக்கூடங்கள் இயங்கிக்கொண்டிருந்தாலும் இயங்கிக்கொண்டிருக்கும்.. R.Kumaresan. 1முதல்9ம் வகுப்புவரை மாணவர்கள் தேர்ச்சி என்பது CBSE,CBSC உட்பட எல்லா பள்ளிக்கூடங்களுக்கும்தானே.. காங்கிரஸ் ஆட்சியில் 1முதல்8ம் வகுப்புவரை காலவரையின்றி மாணவர்கள் தேர்ச்சி என்று சொல்லிவிடுவார்கள்.. R.Kumaresan.

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  பாஸாக்கியதுலே நன்னாபடிக்கிற பிள்ளைகளுக்கு நோ ப்ராப்லம். பிலோ ஆவெரேஜ் மாணவர்களுக்கு தான் கஷ்டம் ப்ளீஸ் தயவு செய்த்துமுழுமுயற்சியுடன் படிச்சு படிப்பிலே தேர்ச்சி பெற முயற்சி பண்ணுங்கள் எல்லா மாணவர்களும் எல்லோரும் சிறந்த மாணவ மணிகளேதான்

 • M.P.MADASAMY - Trivandrum,இந்தியா

  சலுகை மழை பொழிகிறது.கொரோனாவே ஒவ்வொரு துறையிலும் உன் முகம் தெரிகிறது.

 • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

  ஆசிரியர்களுக்கு வினாத்தாள்,விடைத்த்தால் வேலை மிச்சம். மாணவர்களுக்கும் பரீட்சை டென்ஷன் இல்லை.Both are happy.

 • K.Sugavanam - Salem,இந்தியா

  பாராட்டுகள்..இந்த இக்கட்டான சூழலில் இதில் தவறு ஏதும் இல்லை.

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  இந்தியாவில்தான் இதுமாதிரி போட்டி போட்டுக் கொண்டு ஒவ்வொரு மாநில அரசும் அறிவிக்கிறது. வளர்ந்த நாடுகளில் இப்படி மாணவர்களை ஊனப்படுத்துகிறார்களா? தேர்வுகளை மே (அ) ஜூனில் வைத்தால் குடி முழுகுமா? ஆசிரியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பணி குறைந்த சொர்க்க வாழ்வு நீட்டிக்கப் படுகிறது. இளிச்ச வாயர்கள் மருத்துவத்துறையினர்தான். போலீசுக்கு கிம்பளத்தில் பலத்த அடி.

 • தமிழ் வேந்தன் - சென்னை,இந்தியா

  ஐந்தாவது எட்டாவதுக்கு பரீட்சை இல்லையா? ஐயோ பாவம்

 • R. SUBRAMANIAN -

  வாழிய திராவிட தமிழ் திருநாடு.

  • K.Sugavanam - Salem

   இந்தியா முழுதும் இதே கதை தான், பல மாநிலங்களிலும் இது அறிவிக்கப்பட்டது தான்.. எல்லாவற்றிற்கும் குதிரைக்கு கண்ணை மறைப்பது போல திராவிட தமிழ் திருநாட்டை வம்புக்கு இழுக்காவிட்டால் சில ஆதவாளர்களுக்கு தூக்கம் வராது..

 • ஆப்பு -

  மாணவர்களுக்கு வருஷா வருஷம் பரிட்சை சமயத்தில் இதுமாதிரி வந்தா தேவலை.

  • chandran -

   9ம் வகுப்பு வரை எப்போதும் எல்லோரும் பாஸ் என்பதுகூட தெரியாதா ஆப்ஸ். அதுசரி உன் 15லட்சம் பிரச்னை உனக்கு

Advertisement