Advertisement

ஊரடங்கு உத்தரவு அமலானதால் மின் தேவை 4,000 மெகாவாட் சரிவு

சென்னை : கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், தமிழகத்தின் தினசரி மின் தேவை, 4,000 மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது.தமிழக மின் தேவை, தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகாவாட்டாகும்

.இது, கோடைக் காலத்தில், 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டும். மின்தேவை, 2019 ஏப்ரல், 3ல், 16 ஆயிரத்து, 151 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.இம்மாத துவக்கத்தில் இருந்து, வெயில் சுட்டெரிப்பதால், மின் தேவை, 14 ஆயிரத்து, 500 மெகாவாட்டிற்கு மேல் இருந்தது. குறிப்பாக, மாலை, 6:00 முதல், இரவு, 10:00 மணி வரை, 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியது.

தமிழக அரசு, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நேற்று முன்தினம் மாலை முதல், ஏப்., 1 வரை,அனைத்து மாவட்டங்களிலும், 144 தடை உத்தரவு பிறப்பித்தது.இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை ஒழிக்க, மத்திய அரசின், 21 நாள் ஊரடங்கு உத்தரவை, பிரதமர் மோடி அறிவித்தார்.இந்த உத்தரவு, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.ஏற்கனவே, தமிழகத்தில், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு உள்ள நிலையில், பிரதமரின் வேண்டு கோளை ஏற்று, பல வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் தாங்களாக முன்வந்து அவற்றை மூடியுள்ளன.


இதையடுத்து, வெயில் சுட்டெரிக்கும் நிலையிலும், தமிழக மின் தேவை நேற்று, 11 ஆயிரம் மெகா வாட்டிற்கு கீழ் குறைந்தது. இம்மாதம், 18ம் தேதி மின் பயன்பாடு, 14 ஆயிரத்து, 600 மெகாவாட்டாக இருந்தது.தற்போது, 4,000 மெகா வாட் வரை குறைந்த மின் தேவை, வரும் நாட்களில், மேலும் குறையும் என, தெரிகிறது.மின் தேவையை பூர்த்தி செய்ய, தினமும், 3,000 மெகா வாட்டிற்கு மேல் மின் உற்பத்தி செய்யப்பட்ட, அனல் மின் நிலையங்களில், தற்போது, மின் வாரியம், 1,000 மெகா வாட் மட்டுமே உற்பத்தி செய்கிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (9)

  • தமிழ் -

    அப்பொ வருஷா வருஷம் இந்தமாதிரி ஏதாவது வந்தா மின்சார வாரியம் தப்பிக்கும்.

  • M.P.MADASAMY - Trivandrum,இந்தியா

    அப்ப கோடைகால மின் தட்டுப்பாட்டை ஒரு வழியா சமாளிச்சிறலாம்னு சொல்லுங்க .

    • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

      எப்படி பிறக்கும்போதே வா உற்பத்தி செய்த மின்சாரம் டப்பாவில் அடைத்து வைப்பார்கள் கோடை காலத்தில் எடுத்து விடுவார்கள் போதுமா

  • R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா

    தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி யாருக்கு அதையும் சேர்த்துதான் சொல்லியிருக்கிறார்களான்னு தெரியவில்லை.. தமிழ்நாட்டில் 100 யூனிட் மின்சாரம் இலவசம்னு வீடுகளுக்கு மட்டும் சொல்லியிருந்தாங்க.. ஊரடங்கு உத்தரவு.. மார்ச்26, 2020, R.Kumaresan.

    • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

      காற்றாலைகளில் மே மாதம் முதல்தான் மின்னுற்பத்தி .இப்போது வெகு சிறிதளவுதான்

  • ஆப்பு -

    இ.பி காரங்களுக்கு முழு சம்பளம் குடுத்திருங்க.

  • ஆப்பு -

    இன்னும் 20 நாளைக்கி வீட்டுல உக்காந்து வயிறார சாப்புடுங்க.

Advertisement