Advertisement

விழித்திரு விலகி இரு வீட்டில் இரு : முதல்வர் வேண்டுகோள்

சென்னை: மத்திய அரசின் உத்தரவு படி 21 நாள் ஊரடங்கை நாம் அனைவரும் கடைபிடிப்போம் என தமிழக முதல்வர் இ.பி.எஸ்., உரையாற்றினார்.


கொரோனா குறித்து முதல்வர் இ.பி.எஸ்., தமிழக மக்களிடையே பேசியதாவது: கொரோனாவை தடுக்க தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்து யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பொறுப்பான குடிமகனாக இருந்து நம்மையும் சமூகத்தையும் பாதுகாப்போம். முதல்வராக இல்லாமல் குடும்பத்தில் ஒருவராக பேசுகிறேன். அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றால் சமூக விலக்கலை கடைபிடிக்க வேண்டும். ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்து கொரோனாவை ஒழிக்க போராடுவோம்.


21 நாட்கள் என்பது விடுமுறை அல்ல குடும்பத்தை காக்க அரசு விடுத்திருக்கும் உத்தரவு. கொரோனாவை விரட்டட உறுதிஏற்போம்.கொரோனாவை தடுக்கும் நடவடிக்கையாக மருத்துவமனைகளில் 10 ஆயிரத்திற்கும், மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும். மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். நடைபாதை வியாபாரிகளின் நலன்காக்க அரசுஅறிவித்துள்ள ரூ. 1000 த்துடன் மேலும் கூடுதலாக ரூ.1000 வழங்கப்படும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தாங்களாகவே தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மருத்துவ உதவி தேவை எனில் 104 எண் அல்லது 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு முதல்வர் கூறினார்.

பிரதமருக்கு கடிதம்



முன்னதாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளதாவது: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிறப்பு நிதியாக ரூ. 4 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க கூடுதலாக 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதியை ரூ.500 கோடியாக உயர்த்த வேண்டும். சிறுகுறு நிறுவனங்களுக்கான வங்கி கடன் வட்டியை இரண்டு காலாண்டு தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.இவ்வாறு அந்த கடிதத்தில் முதல்வர் கூறியுள்ளார்.

நாளை ஆலோசனை



கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., நாளை(மார்ச் 26) வீடியோ கான்பரன்சிங் முறையில் கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (14)

  • s t rajan - chennai,இந்தியா

    சிறந்த முறையில பணியாற்றும் முதல்வருக்கும் அரசுக்கும் பாராட்டுகள். மருத்துவர்கள், செவலியர்கள் துப்புரவாளர்கள் ரேஷன் வழங்குவோர் மட்டுமின்றி தந்நலம் கருதாது பணியாற்றும் வங்கி ஊழியர்களுக்கும் நம் நன்றி கலந்த பாராட்டுகள். இவர்கள் அனைவரும் நோயற்ற வாழ்வு வாழ ப்ரார்த்திப்போம்

  • Raj - Chennai ,இந்தியா

    Implement CAA and NPR to save Indians. Stop sponsoring to pilgrims. Don't be nice for vote politics.

  • palaniamma - Chennai,இந்தியா

    ஏதோ ட்விட்டருல போட்டமா, நெட் payment தந்தோமான்னு இல்லாம இன்னும் என்ன கடுதாசி அப்பு அப்புறம் அவுக தந்தி மணி ஆர்டர் அனுப்புவாங்க...

  • palaniamma - Chennai,இந்தியா

    டிஜிட்டல் இந்தியாவுல இன்னுமா கடுதாசி எழுதி வுடுறீங்க அப்புறம் அவரு கோவிச்சுக்க மாட்டாரா

  • palaniamma - Chennai,இந்தியா

    அட்ரா சக்கை அட்ரா சக்கை விட்டா விவேகானந்தர் ரேஞ்சுக்கு அடிச்சு விடுறது, தனித்திரு விழித்திரு பசித்திரு, ஆகா ஓஹோ பேஷ் பேஷ்

    • Srinivas - Chennai,இந்தியா

      நாங்களும் சேக்கிழார் ரேஞ்சுக்கு பேசுவோம்ல...

Advertisement