Advertisement

கொரோனாவுக்கு எதிராக 69 தடுப்பு மருந்து; விஞ்ஞானிகள் தகவல்

வாஷிங்டன்: கொரோனா நோய் தொற்றால் உலகில் 19,618 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நோயை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் சமூக விலகல், தனிமைப்படுத்தல், வீட்டில் இருத்தல் என தீவிரமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அந்த ஆய்வில் 69 வைரஸ் தடுப்பு மருந்துகள், சோதனையில் உள்ளன. அவற்றில் 24 மருந்துகள் தீவிர ஆய்வில் உள்ளன. அன்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸ் தடுப்பு மருந்துகள், பிற நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளவை. அவற்றை, கோவிட்-19க்கு எதிராக பயன்படுத்தினால் உயிரிழப்புகளை குறைக்க முடியும்.

நுரையீரல் பாதிப்பு



கொரோனா வைரஸ், மனித நுரையீரலில் நுழைந்து, தனது மரபணுக்களை செலுத்தி, வைரஸ் புரதங்களை உருவாக்குகிறது. பிறகு அதிலிருந்து லட்சக்கணக்கான புதிய வைரஸ்கள் உருவாகி நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

இந்த புதிய ஆய்வில், கொரோனா வைரஸின் 29 மரபணுக்களில் 26ஐ ஆய்வு செய்ததில், அவை வைரஸ் புரதங்களின் நேரடி உற்பத்தியாக இருந்தது. மனிதனில் உள்ள 332 புரோட்டின்களை கொரோனா வைரஸ் பாதிக்கிறது என்பதை கண்டறிந்தனர்.
சில வைரஸ் புரதங்கள், ஒரே ஒரு மனித புரோட்டின்னை பாதிக்கின்றன. மற்ற வைரஸ் புரதங்கள், 12 மனித செல்லுலர் புரோட்டின்களை தாக்குகின்றன. இம்மருந்துகளை கொரோனாவுக்கு எதிராக சோதனை செய்ததில், கொரோனா வைரஸை அழிப்பததோடு, அதன் பக்கவிளைவாக, மனித செல்லுலர் புரதங்களையும் பாதிக்கிறது. கொரோனா எதிர்ப்பு மருந்துகளில் ஒன்றான மலேரியாவுக்கு எதிராக தரப்படும் வைரஸ் தடுப்பு மருந்து குளோரோ குயின். இம்மருந்து, சிக்மா-1 எற்பி(ரிசப்டர்)எனப்படும், மனித செல்லுலர் உடன் இணைந்து கொள்ளும். இந்த ரிசப்டரையும் கொரோனா பாதிப்பை ஏற்படுத்துகிறது.

தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களின் நிறுவனத்தின் இயக்குநர்கள் டாக்டர் அந்தோனி, பாசி கூறும்போது, சோதனை தடுப்பு மருந்துகளில் கொரோனாவுக்கு எதிரான தீவிரமான எதிர்ப்பு மருந்தாகவும், பாதுகாப்பானதாகவும் குளோரோ குயின் செயல்படுகிறது என்றார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Nathan - Hyderabad,இந்தியா

    என்னமோப்பா , சந்திரமான் புதுவருஷம் சார்வரியும் பொறந்தாச்சு. நிலைமை சீரடையனும். சூர்யமான புதுவருஷம் 14 ல் தமிழ் புத்தாண்டில் சூரியனாரும் மேஷத்தில் குதித்து மிக்க சந்தோஷமாவர். நற்பலன் அருளுக.

Advertisement