Advertisement

இப்போது தனித்திருங்கள்... எப்போதும் எங்களுடன் இணைந்திருங்கள்! உண்மை செய்திகளுக்காக!

எங்கள் உயிருக்கு உயிரான வாசகர்கள் கவனத்திற்கு!கொரோனாவை விட பயங்கரமானது, அது குறித்து 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக தளங்களில் பரவும் தவறான தகவல்கள். அதற்கு, மேலும் ஒரு உதாரணம், சமீப காலமாக தினசரி செய்தித்தாள் மூலமாக கொரோனா பரவுகிறது என, 'வாட்ஸ் ஆப்' தகவல்கள் உளறி வருவதுதான்.


இதில், கொஞ்சமும் உண்மையில்லை


மற்ற பத்திரிகைகள் எப்படியோ 'தினமலர்' இதழை பொறுத்தவரை வாசகர்களிடம் மிகவும் பாதுகாப்பான முறையிலேயே கொண்டு போய் சேர்க்கப்படுகிறது.கன்டெய்னரில் வரும் பேப்பர் ரீலை எடுப்பது, பின் அதுவாகவே மிஷினில் பொருந்திக் கொள்வது, கம்ப்யூட்டர் மூலம் கொடுக்கப்படும் உத்திரவிற்கு ஏற்ப பிரிண்ட் ஆவது, பிரிண்ட் ஆன பேப்பர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, தானாகவே கட்டுப்போடப்பட்டு வேனில் போய் விழுவது வரை எந்த இடத்திலும், மனிதர்கள் கைபடாமல் தானாகவே நடக்கிறது. இந்த பேப்பர் கட்டுகள்தான் ஏஜன்ட்டுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு மறுநாள் காலை உங்கள் வீடுகளுக்கும் கடைகளுக்கும் வந்து சேருகிறது.இது தினமலர் அச்சாகும் பதிப்புகள் அனைத்திலும் பல ஆண்டுகளாக நடந்துவரும் நடைமுறை. இப்போது, புதிதாக எப்போது கொரோனா பயம் வந்ததோ அது முதல் பிரிண்ட்டாகி வரும் ஒவ்வொரு இதழும், சானிட்டைசர் மூலம் ஸ்பிரே செய்யப்பட்டு, சானிடைசான பிறகே தானாக கட்டுப்போடும் பகுதிக்கு செல்கிறது.


இன்னும் கூடுதலாக, பத்திரிகையை எடுத்துச் செல்லும் வேன் நுழைவதற்கு முன்பும், பின் பத்திரிகை கட்டுகளின் மீதும் கிருமி நாசினி அடிக்கப்பட்டு பின்னரே பத்திரிகையை சுமந்து செல்லும் வேன் வெளியே விடப்படுகிறது.தினமலர் தன் வாசகர்களை உயிருக்கு உயிராக நேசிப்பதால் ஒரு நுாலளவு கூட வாசகர்களுக்கு பிரச்னை வந்துவிடக்கூடாது என்பதற்காக, காலையில் உங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து பேப்பர் டெலிவரி செய்யும் பையன்கள், அனைவருக்கும் கையுறை வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.


நீங்கள் அன்றாடம் உபயோகிக்கும் ரூபாய் நோட்டுகள், டெபிட் கிரெடிட் கார்டு, டீ கடை கிளாஸ்கள், லிப்ட், கைப்பிடிகள், வாகனங்கள் போன்ற தவிர்க்கவே முடியாத பல விஷயங்களை விட, தினசரி பேப்பர் மூலம் கொரோனா பரவிவிடாது.கொத்து கொத்தாக மக்கள் இறந்து விழும் இத்தாலியிலும், ஜெர்மனியிலும், பேப்பர் இண்டஸ்ட்ரியே கிடையாது. ஆம், அங்கு நாளிதழ் படிக்கும் பழக்கமே கிடையாது. ஆனாலும், அங்கேதான் அதிகமான உயிர்ப்பலி என்பதை நினைவில் கொள்ளவும்.


இவ்வளவு துாரம் வரிந்து கட்டிக் கொண்டு தினசரி பேப்பருக்கு வக்காலத்து வாங்குவதால், இதை வைத்து நன்றாக வியாபாரம் போகிறது போலும், என்று, எண்ணிவிடாதீர்கள். விளம்பரங்கள் சுருங்கிப் போய், மக்கள் இடமாற்றம் போன்ற காரணங்களால், இன்றைய தேதியில் பேப்பர் வருவது நஷ்டத்தில்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.அப்படி ஏன் நஷ்டத்தில் கொடுக்க வேண்டும் என்றும் ஒரு சாரார் பகடி செய்வர். எவ்வளவு நல்ல விஷயங்களில் நமக்கு கைகொடுத்து உற்சாகப்படுத்திய, வளர்த்த விட்ட ஆதரவுதரும் உயிருக்கு உயிரான வாசகர்களுக்கு, இந்த இக்கட்டான சூழலில் கைகொடுக்க வேண்டும், என்ற நன்றிக்கான செயல்பாடுதான் இப்போது நடப்பது.


மேலும், வாட்ஸ் ஆப் போன்ற நம்பத்தகாத செய்திகளை தந்து, மக்களை அச்சத்தில் தள்ளிவிடுவது அல்ல பத்திரிகைகளின் நோக்கம். அவர்களுக்கு, அந்த அக்கறை கொஞ்சமும் கிடையாது. ஆனால், பத்திரிகைகள் அப்படி அல்ல... ஒரு செய்தி பலரால், பலமுறை பரீசிலிக்கப்பட்டு, அந்த செய்தியால் சமூகத்திற்கு நன்மை இருக்கும் என்றால் மட்டுமே, அச்சில் ஏற்றப்படுகிறது. காரணம் எங்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது.ஆகவே, வாசகர்களே... உங்களுக்கான தினமலர் பாதுகாப்பாக, பத்திரமாக கொண்டுவந்து சேர்க்கப்படுகிறது என்பதை, அக்கறையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏஜன்ட்களே... லைன்பாய்களே... ஹாக்கர்களே... கடைக்காரர்களே!'தினமலர்' நாளிதழ் உங்கள் கைகளில் கிடைக்கும்போது, கிருமி நாசினி தெளித்து துாய்மையான முறையில் வழங்கப்படுகிறது. நீங்கள் எடுத்து தைரியமாக வினியோகிக்கலாம். நாளிதழ் வினியோகித்தபின் உங்கள் கைகளை, 25 வினாடிகள் சோப்பு போட்டு நன்கு தேய்த்தபின், தண்ணீரில் கழுவிக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (36)

 • mohankumar - Trichy,இந்தியா

  நாளைமுதல் ரேஷனில் இலவசங்களுக்கு மக்கள் கூட்டம் அதிகம் கூடாமல் பார்த்து கொள்ள வேண்டும். இடைவெளி விட்டு விலகி நிற்கலாம் ஆனால் நம் மக்கள் முண்டியடித்து இவ்வளவு நாள் முழுவதும் வீட்டில் இருந்து காத்து கொண்ட lock down அர்த்தமில்லாமல் போகும்

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  im reading in net but my husband is not able to read bcs of his old age he like to read onlly full news paper in calm and peacefull

 • Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ

  உண்மை செய்திகள்...

 • T.B.Sathiyanarayananan - Madurai.,இந்தியா

  Yes, you are an example for other news papers.Thank you very much to all the workers.

 • mohanamurugan - panruti,இந்தியா

  "மோடியை பின்பற்றிய பிரிட்டன் தேசம்" போன்ற உண்மைச் செய்திகளை நாளிதழ்கள் மட்டுமே தர முடியும்

Advertisement