Advertisement

சிறுமி பாலியல் பலாத்காரம் இருவருக்கு 7 ஆண்டு சிறை; காரைக்கால் கோர்ட் தீர்ப்பு

Share
காரைக்கால்: வீடு புகுந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கு 7ஆண்டு சிறை தண்டனை விதித்து காரைக்கால் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

காரைக்கால் அடுத்த நெடுங்காடு புத்தக்குடி கன்னிக்கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ஜெயபால் மகன் விசு (எ) நடராஜன்,30; பன்னீர் மகன் பாண்டியராஜன்,35; இருவரும், கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ம் தேதி இரவு, அதேபகுதியில் ஒரு வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றனர்.இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில், விசு (எ) நடராஜன், பாண்டியராஜன் ஆகியோரை கைது செய்த நெடுங்காடு போலீசார், இருவர் மீதும் காரைக்கால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், விசு (எ) நடராஜன் மற்றும் பாண்டியன் ஆகிய இருவருக்கும் ஏழாண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் அரசு வழங்க உத்தரவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement