Advertisement

தேனியில் 34 பேர் தொடர் கண்காணிப்பு

தேனி :'கொரோனா' பாதித்த வெளிநாடுகளில் இருந்து தேனி வந்த 34 பேர் , வீட்டுக்கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.வெளிநாடுகளில் படித்த, பணிபுரிந்த 68 பேர் சொந்த ஊரான தேனி வந்தனர். 'கொரோனா' முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் ஜன. 26 முதல் சுகாதாரத்துறையினரின் தொடர் வீட்டு கண்காணிப்பில் இருந்தனர். ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள் தினமும் அவர்களின் வீடுகளுக்குச்சென்று காய்ச்சல், சளி - இருமல் உள்ளிட்ட சோதனை செய்தனர். 28 நாட்கள் கண்காணித்து அவர்களில் 34 பேருக்கு வைரஸ் கிருமி தொற்று இல்லை என கண்டறிந்து வீட்டு கண்காணிப்பை தளர்த்தியுள்ளனர். எஞ்சிய 34 பேர், ஆறுநாட்களாக கண்காணிக்கப்படுகின்றனர்.இப்பணிகளை மாவட்ட பொதுசுகாதாரத்துறை துணை இயக்குனர் (பொ) செந்தில்குமார் தலைமையில், மாவட்ட தொற்று நோய் மருத்துவ அலுவலர் அஜித் சாமுவேல் கண்காணித்து வருகின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'தேனி மாவட்டத்தில் இதுவரை 4 பேருக்கு மட்டுமே 'கொரோனா'வுக்கான 'ஸ்வாப்' டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு நோய் பாதிப்பு இல்லை. அதனால் பீதியடைய தேவையில்லை. ஜெர்மன், தென்கொரியா, இத்தாலி, ஈரான் ,சிங்கப்பூர் உட்பட 12 நாடுகளில் இருந்து வந்தவர்கள் வீடுகளில் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதால், நோய் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை, 'என்றனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement