Advertisement

போராட்டங்களுக்கு பொதுமக்கள் நிதி மேற்கு வங்க கவர்னர், கிடுக்கிப்பிடி

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு, பொதுமக்கள் நிதியில் இருந்து செலவு செய்யப்பட்ட பணம் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநில அரசுக்கு, கவர்னர் ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்தின் பல பகுதிகளில், தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. மம்தா அரசும், பல போராட்டங்களை நடத்தி வருகிறது.இந்நிலையில், மாநில அரசுக்கு, கவர்னர் ஜக்தீப் தன்கர், அது தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். கடந்த, 4ம் தேதி, தலைமை செயலருக்கும், தகவல் மற்றும் கலாசார விவகாரதுறைக்கும் அனுப்பப்பட்ட அந்தக் கடிதத்தில், 'குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்ட பிரசாரங்களுக்கு, பொதுமக்கள் நிதியில் இருந்து செலவு செய்யப்பட்ட பணம் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யுங்கள்' என, உத்தரவிடப்பட்டிருக்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக விளம்பரம் செய்ய, செய்தித்தாள் மற்றும் 'டிவி' க்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் தரப்பட்டுள்ளது. இதற்கு, தலைமை செயலர், உள்துறை செயலர் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள், முதல்வர் மம்தாவுக்கு உடந்தையாக இருந்துள்ளதை அறிந்து, கவர்னர் அதிருப்தி அடைந்துள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement