Advertisement

பள்ளி அருகில் உரம் தயாரிப்பு துர்நாற்றத்தால் மாணவர்கள் அவதி

தண்டையார்பேட்டை : பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள உரம் தயாரிக்கும் மையத்தால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சாப்பிட்ட முடியாமல் மாணவர்கள் அவதியடைக்கின்றனர்.

தண்டையார்பேட்டை - எண்ணுார் நெடுஞ்சாலையில், இ.சி.ஐ., மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை உள்ள பள்ளியில், 1,000த்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி கற்கின்றனர்.இப்பள்ளியின் சமையலறை பின்புறம், தண்டையார்பேட்டை மண்டலத்தின்உரம் தயாரிக்கும் மையம் உள்ளது. இங்கு, 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள், தண்டையார்பேட்டை சுற்றியுள்ள இடங்களில் இருந்து, குப்பையை சேகரித்து வந்து, இம்மையத்தில் குப்பையை தரம் பிரித்து, உரம் தயாரித்து வருகின்றனர்.

இவ்வாறு தயாரிக்கும் உரத்தை, பள்ளி வளாகத்தின் முன்புறம் வைத்து காய வைக்கின்றனர். இதனால், பள்ளி வளாகத்தில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.சமையலறையின் பின்புறம், உரம் தயாரிக்கப்படுவதால், பள்ளி மாணவ - மாணவியர் உணவு உட்கொள்ள பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.இது குறித்து பள்ளி மாணவர்களின் பெற்றோர், பலமுறை மாநகராட்சியில் புகார் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறியதாவது:உரம் தயாரிக்கும் மையத்தால், மாணவ - மாணவியர் பெரிதும் அவதியடைந்துள்ளனர். தினமும் பள்ளியை கடந்து செல்வதற்குள், பெற்றோர் பெரும்பாடுபடுகிறோம். இப்பிரச்னைக்கு, மாநகராட்சி விரைந்து தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement