Advertisement

கணவனை கழுத்து நெரித்து கொன்ற புதுவண்ணை பெண் கைது

புதுவண்ணாரப்பேட்டை : புதுவண்ணாரப்பேட்டையில், கணவனை, கழுத்து நெரித்துக் கொலை செய்த மனைவியை, போலீசார் கைது செய்தனர்.


தண்டையார்பேட்டை, வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் தணிகைவேல், 46; தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி, ரேகா, 39. இவர்களுக்கு, கீர்த்திகா, 19, என்ற மகளும், அவினாஷ், 15, என்ற மகனும் உள்ளனர்.கீர்த்திகா, அதே பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டும்; அவினாஷ் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.குடிப்பழக்கத்திற்கு அடிமையான தணிகைவேல், தினமும் குடித்துவிட்டு, வீட்டிற்கு வந்து, மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.


நேற்று முன்தினம் நள்ளிரவு, வழக்கம் போல் குடித்துவிட்டு வந்து, ரேகாவை அடித்துள்ளார். இதை அவரது மகள் கீர்த்திகா தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த தணிகைவேல், கீர்த்திகாவை அடித்ததில் அவர் படுகாயமடைந்தார்.இதனால் கோபமடைந்த ரேகா, தணிகைவேலை, கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.இது குறித்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், ரேகா, தணிகைவேலை கொலை செய்தது தெரிய வந்தது. சம்பவத்தில் ஈடுபட்ட ரேகாவை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement