Advertisement

ஆம்ஆத்மியினர் வன்முறை செய்திருந்தால் இரட்டிப்பு தண்டனை: கெஜ்ரிவால்

புதுடில்லி: டில்லி வன்முறையில் யார் குற்றவாளியாக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என்றும், ஆம்ஆத்மி கட்சியினர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் இரட்டிப்பு தண்டனை வழங்கப்படும் என்றும் முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டில்லியின் வடகிழக்கு பகுதியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. இதில், பல வீடுகள், கடைகள், வாகனங்கள் சூறையாடப்பட்டன. வன்முறையில் போலீஸ் கான்ஸ்டபிள், உளவுத்துறை அதிகாரி உட்பட 35 பேர் பலியாகினர், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் டில்லி ஐகோர்ட்டின் அறிவுறுத்தலின் படி, வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் டில்லியில் செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் கூறியதாவது: வன்முறையால் வன்முறையில் குற்றவாளி என நிரூபிக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். ஆம்ஆத்மி கட்சியை சேர்ந்தவராக இருந்தால் அவருக்கு இரட்டிப்பு தண்டனை வழங்கப்படும். தேசிய பாதுகாப்பு பிரச்சினையில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது. வன்முறையை தூண்டும் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், ஆம்ஆத்மி அமைச்சராக இருந்தாலும் கூட அவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்.

நிவாரணம்வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சமும், வீடுகளை இழந்தோர்களுக்கு ரூ.5 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள் 'பரிஷ்டே' திட்டத்தின் மூலம், எந்த தனியார் மருத்துவமனையில் வேண்டுமானாலும் சிகிச்சை பெறலாம். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (39)

 • SIVA G india - chennai,இந்தியா

  இந்த நேரத்தில் எந்த கட்சியின் மத்திய அரசானுலும் எதிர்[ரி]கட்சிகள் குறைசொல்லி எதிர்கால ஓட்டு பிச்சைக்காக எரியும் தீயில் எண்ணை ஊற்றுகிறார்கள். மதம் பாராமல் பாதித்தவர்களுக்கு உதவுவோம், இறைவன் நமக்கு கொடுத்ததில் சிறிது கொடுத்து,சரீரத்தாலும் உதவுவோம்" என சொல்லாமே. முன் உதாரணங்கள் பலமுறை மதக்கலவரங்கள் நடந்து உயிர் பலியாகியுள்ளன.. இவையாவும் ஒரு நாளில் திடீரென வரவில்லை.ஓவ்வொரு நாளும் உஸ்ணம் ஆவது தெரிந்தே எல்லா மதத்தலைவர்களும் அமைதி படுத்தாது கண்டு கொள்ளாமல் விட்டதின் விழைவுகளே. இனி சர்வமத அமைதி பேரணி என தங்களை பெருமை படுத்திகொள்ள அமைதி ஊர்வலம் மட்டுமே செல்வார்கள். உயிர் பலியும், வலியும் பல ஆண்டுகள் அந்த குடும்பங்களுக்கு வடுவாக இருக்குமே. இனி எங்கும் ஜாதி கலவரம் நடந்தால் அந்த பகுதியில் உள்ள கலவர ஜாதிகளின் தலவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து ஒராண்டாவது சிறை தண்டனை தரபட வேண்டும்.மத கலவரமானல் அப்பகுதி மதத்தலைவர்களை சிறையில் அடைக்க வேண்டும். அரசியல் கலவரமானால் அப்பகுதி அரசியல் தலைவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்து ஓராண்டு சிறை தணடனை தரபடவேண்டும்.மேலும் எக்காலத்திலும் அவர்களுக்கு பதவிகள் கொடுகககூடது. நீதித்துறை இனி அரசு,காவல்துறை அல்லாமல் வருங்காலங்களில் அரசியல் தலவர்களுக்கும்,ஆன்மீக தலைவர்களுக்கு முன்கூட்டியே அமைதி ஏற்படுத்தவேண்டும் மீறினால் சட்டபடி கடும் தண்டனை என கண்டிக்கும் என நம்புவோமே.

 • Selvan - NY,யூ.எஸ்.ஏ

  உன் MLA தாஹிர் ஹுசைன் தான் சாட்சியங்களோட சிக்கியிருக்கிறார். கோர்ட் அவனை தூக்கில் போட்டால் நீயும் தொங்கிக்கோ. இரட்டிப்பு சரியாயிடும்

 • Cheran Perumal - Radhapuram,இந்தியா

  இதெல்லாம் சும்மா ஓலஒலாகட்டிக்கு. எந்த கட்சி என்று பார்த்து கோர்ட் தண்டனை கொடுக்குமா என்ன?

 • Vaduvooraan - Chennai ,இந்தியா

  என்னது இவரு இரட்டிப்பு தண்டனை தரப் போறாராமா? இது என்ன மின்சாரம், தண்ணி, மெட்ரோவில் ஓசி பயணம் இது மாதிரி இலவசமாக எடுத்துக் குடுக்குற விசியமா என்ன? டில்லியின் திராவிடக் கட்சி தலைவர் இந்த மனிதர் அந்த ஊர் மக்களும் தமிழர்கள் மாதிரிதான் அதுதான் மூணாவது தடவையா தேர்ந்தெடுத்திருக்காங்க

  • R MURALIDHARAN - coimbatore,இந்தியா

   நமது திராவிட கட்சி தலைவர்களோடு கெஜ்ரிவாலை ஒப்பிடுவது தவறு. அவர் பல நல்ல காரியங்களை செய்துள்ளார். ஊழல் செய்யவில்லை

 • Sampath Kumar - Kampala,உகான்டா

  Selfish guy, and BJP as well, didn't stood strong decision to eliminate this type of activities, hate modi ji now, delhi CM is selfish guy what about you our great PM didn't take any necessary action against this anti terrorist from starting itself, it's another black mark like Gujarat fightings, hate you, don't to it again, where problem is there take strong decision to this anti Indian terrorist from starting stage itself, don't wait, thanks.

Advertisement