Advertisement

கொரோனா வைரஸ்: உலக நாடுகளில் ஏற்படுத்திய தாக்கம்

பீஜிங் : சீனாவில் உருவாகி, 37 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் செயல்பாடுகளை புரட்டி போட்டுள்ளது.
கொரோனா வைரசிற்கு சீனாவில் 2800 பேர், ஈரானில் 26 பேரும் பலியாகி உள்ள நிலையில் ஜப்பானில் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மேலும் பரவுவதை தடுக்க மார்ச் 2 வரை ஜப்பானில் உள்ள பள்ளிகளை மூட அந்நாட்டு பிரதமர் சின்சோ அபே உத்தரவிட்டுள்ளார்.

சவுதி அரேபியா அரசு, இஸ்லாமிய மக்கள் புனித தலமான மெக்கா, மெதீனா நகர்களுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதித்துள்ளது. வெளிநாட்டினர் தங்கள் நாட்டிற்கு வரவும் தடை விதித்துள்ளது. மெக்கா நகருக்கு ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து 1.8 பில்லியன் மக்கள் வந்து செல்வது வழக்கம்.


இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என்ற போதிலும், வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொருளாதாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவில் இருந்து இறக்குமதி செயல்படும் எலக்ட்ரானிக் மற்றும் எலக்ட்ரானிக் உதிரி பாகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், பணவீக்கத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. நேரடியாகவும், மறைமுகமாகவும் இந்திய கம்பெனிகளுக்கு சப்ளை செய்யப்படும் மூலப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மெக்சிகோ நகரில் பள்ளிகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள நோயாளிகள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா

  உலகிலே எங்கெல்லாம் ஏழ்மையும் ஏழைகளும் அதிகமோ அங்கெல்லாம் சுத்தம் சுகாதாரம் ஜீரோ நம்ம நாட்டுலேயும் வறுமை யின் %ரொம்பவேதிக்கம் நாமும் ஜாக்கிரதையா இருக்கவேண்டும் தினம் எல்லோரும் நிலவேம்புகஷாயம் குடிக்கவும்

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  The alleged biological weapons have boomeranged on them.Probably they have failed in their attempt in finding the antidote.

 • ஆப்பு -

  நம்ம நாட்டுலே கொரோனா வைரஸ் கிடையாது.

 • chandran - ,

  இந்துக்களின் கோடிக்கணக்கான பணம் மிச்சம். அவன் புத்திய காட்டிட்டான். கொரனாவுக்கு பயந்து எவனையும் உள்ள உடமாட்றான். ஆனா இங்க மட்டும் கொரனாவவிட கொடிய முசுலிமுக்கு குடி உரிமை குடுக்கனுமாம்.

 • சீனி - Bangalore,இந்தியா

  பொருளாதார தாக்கம் எதிர்பார்த்ததை விட அதிகமா இருக்கும். இன்னும் நிலைமை சரியாக 6 மாதம் கூட ஆகலாம். உலக சுகாதார நிறுவனம், கொஞ்சம் காலதமதமாதான் தடுப்பு எச்சரிக்கை அனுப்புனது என்ற குற்றச்சாட்டு உள்ளது. சீனாவுக்கு ஆதரவு கொடுக்கதான், முதலில் பயணதடுப்பு பற்றி முறையா அறிவிக்கலைன்னு பேசுறாங்க. இது வரை 30% தான் குணமாயிருக்காங்க, ஜப்பானில் ஒருவாட்டி பாதிச்ச பெண்ணுக்கு 2 வாரம் கழிச்சு 2வது வாட்டி வந்திருக்காம். எனவே முடிந்தவரை தள்ளியிருப்பது நல்லது. டெஸ்டும் விலை அதிகம், சிகிச்சை செலவும் அதிகம், எனவே நோய் கடுமையா பரவ ஆரம்பிச்சா, பல ஏழைகள் பாதிக்க படுவார்கள். சீனாதான் உலகத்திற்க்கு போன், எலக்ட்ராகிக் பொருள், ஆட்டோ உதிரி பாகம் உட்பட, பல பொருள் தயாரிக்கிறாங்க, எனவே உலக பொருளாதாரம் கடுமையா பாதிக்க வாய்ப்பு உள்ளது. கொஞ்ச காலம் பணத்தை வெளிய செலவுபண்ணாம சேர்த்துவைத்துக்கொள்வது குடும்பத்திற்க்கு நல்லது. ஒரே நேரத்தில் பல ஆயிரம் பாதிக்கப்பட்டா எல்லா மருத்துவனையும் நிரம்பிவிடும், அப்போதான் சிகிச்சை வசதி கிடைக்காம சாவுகள் அதிகமாகும், அப்பேர்பட்ட சீனா 1500 பேருக்கு தனியா மருத்துவனை கட்டினாகூட சமாளிக்க முடியலையாம், எனவே முடிந்தவரை இந்தியா பத்திரமா இருப்பது மக்களுக்கு நல்லது.

Advertisement