Advertisement

பிரதமரால் பாராட்டு பெற்ற மூதாட்டிக்கு ஆதார் கிடைத்தது

திருவனந்தபுரம்: 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியால் பாராட்டு பெற்ற மூதாட்டிக்கு 105 வயதில் ஆதார் கார்டு கிடைத்துள்ளது.

கேரளாவை சேர்ந்த பாகீரதி அம்மாள் (வயது 105) என்ற மூதாட்டி, 10 வயதிலேயே பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார். படிப்பின் மீதான ஆர்வத்தில் தற்போது படிப்பை தொடங்கிய அவர், 4ம் வகுப்பு தேர்வில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றார். கடந்த பிப்.,23ம் தேதி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாகீரதியின் படிப்பு ஆர்வத்தை பாராட்டி, அனைவருக்கும் முன்மாதிரியான அவருக்கு மரியாதை செலுத்துகிறேன், என்றார்.
இதற்கிடையே, அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஆதார் கார்டு அவசியம் என்ற நிலையில், ஆதார் கார்டு இல்லாமல் பாகீரதி தவித்து வந்தார். மோடி பாராட்டி பேசிய பிறகு இவரின் நிலையை அறிந்த அதிகாரிகள், ஆதார் கார்டு பெற ஏற்பாடு செய்தனர். இது தொடர்பாக அரசு அதிகாரிகள் கூறுகையில், பாகீரதி அம்மாளுக்கு ஆதார் கார்டுக்கான ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் கார்டு வழங்கப்பட்டுவிடும், எனத் தெரிவித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • B.s. Pillai - MUMBAI,இந்தியா

    I think I should also approach the Hon.P.M. to get my Aadhar card address changed.Though one year had passed after paying 50/= charges, my Aadhar is with the same old address. Why they collected 50/=, if the intention is not to issue or is it to harass a Senior citizen ? I had made 3 attempts to go to Aadhar centre to fill up form and paid 50/= and my finger prints also matched. But till now my new addresss is not d in the web cite.

  • ஆப்பு -

    ரெண்டு கோடி வேலைவாய்ப்பெல்லாம் குடுக்க முடியலை. மூதாட்டிக்கு ஆதார் தான் குடுக்க முடியும்.

  • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

    The fact is that she didn't care to have one.She may be electoral identify.

  • Sridhar - Chennai,இந்தியா

    மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எல்லா அதிகாரிகளும் உண்மையாகவே தேவை உள்ளவர்களுக்கு உதவலாம். ஆனால் தமிழ் நாட்டில் நடக்குமா?

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    வசதியான குடும்பமாகத் தெரிகிறது. ஏன் ஆதார் கார்டு கிடைக்காமல் தவிக்க நேர்ந்தது? ஆதார் மையத்திற்கு கூட்டிப் போக குடும்பத்தினர்க்கு அக்கறை இல்லையோ? தற்குறி அரசியல்வாதி வீடாக இருந்தால் கம்ப்யூட்டருடன் அதிகாரிகளை வீட்டிற்கு வரவழைத்திருப்பார்கள்.

Advertisement