Advertisement

தீக்கிரையான டில்லி பள்ளி: சாம்பலான புத்தகங்கள்

புதுடில்லி : டில்லியில் கலவரத்தின் போது பள்ளி ஒன்றிற்கு தீவைக்கப்பட்டுள்ளது. இதில் புத்தகங்கள், நோட்டுகள், தேர்வுத்தாள்கள் என அனைத்தும் எரிந்து சாம்பலாகி உள்ளன.
டில்லியின் வடகிழக்கு பகுதியில் பிரிஜ்புரி சாலையில் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 3000 குழந்தைகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் பிப்.,25 அன்று, காலையில் மாணவர்கள் அனைவரும் தேர்வு முடிந்து சென்ற பிறகு பள்ளிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
இது பற்றி பள்ளியின் காசாளர் நீத்து சவுத்ரி கூறுகையில், மாலை 4 மணியளவில் சுமார் 250 முதல் 300 பேர் அனைத்து பக்கமும் இருந்து பள்ளிக்குள் வந்துள்ளனர். ஒன்றும் புரியாத காவலாளி, உயிரை காப்பாற்றிக் கொள்ள பின் கேட் வழியாக தப்பிச் சென்றுள்ளார். பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் தீவைத்து விட்டு சென்றுள்ளனர். போலீஸ் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தோம். ஆனால் பதற்றமான நிலை காரணமாக இரவு 8 மணிக்கே தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர் என்றார்.
இதில் நூற்றுக்கணக்கான பாட புத்தகங்கள், நோட்டுகள், தேர்வுத்தாள்கள், ஆவணங்கள் ஆகியன சாம்பலாகி உள்ளன. மேஜை, நாற்காலிகளும் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 3 நாட்களுக்கு பின் பள்ளிக்கு சென்று பார்த்த பள்ளி நிர்வாகி, ஆசிரியர்கள், மாணவர்கள், அனைத்து பொருட்களும் சாம்பலாகி உள்ளதை கண்டு கண்ணீர் விட்டு அழுத சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (27)

 • Ray - Chennai,இந்தியா

  ஏடு தந்தானடீ தில்லையிலே அதை பாட வந்தேனடி அவன் எல்லையிலே

 • Pannadai Pandian - wuxi,சீனா

  இப்படித்தான் அந்தக்காலத்தில் மூர்கள் நாளந்தா பல்கலை கழகத்தை கொளுத்தி அங்குள்ள ஊளை சுவடிகள், பொக்கிஷங்கள் என்று அழித்தார்கள். அந்த நிகழ்வு ஒரு மாத காலம் நீடித்தது…...மூர்க்கர்களுக்கு வெள்ளைக்காரன் தான் லாயக்கு….பதிலுக்கு பதில் தருவான்….

 • kalyanasundaram - ottawa,கனடா

  WHAT A GREAT SERVICES TO PUPIL BY THESE THIRD RATE POLITICAL PARTIES AS WELL THEIR CHAMCHAS

 • Rajesh - Chennai,இந்தியா

  இந்த நாடு உருப்பட சத்தியமா, சாத்தியமே இல்லை......

 • vivek c mani - Mumbai,இந்தியா

  அளவு கடந்த வெறித்தனம் பிடித்தவர்கள் சிறுவர்கள் படிக்கும் பள்ளியை கூட மதத்தின் பெயரால் விட்டுவைக்கவில்லை. ஆசிரியர்களும் மாணவர்களும் கண்ணீர் சிந்துவது மனதை நோகவைக்கிறது. 70 நாட்களுக்கும் மேலாக பல எதிர் கட்சி தலைவர்களும், வெறுப்பேற்றும் பேச்சினை பேசுவோர் கூட்டங்களும் சேர்ந்து தலைநகரை நாற வைத்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் துன்பம் பற்றி இவர்களுக்கு கவலையில்லை. முக்கியமான சாலையை மறித்து லட்சகணக்கான மக்களின் அவதிக்கு காரணமானோர் மற்றவர்களையோ அரசையோ குறை சொல்ல அருகதை இல்லை. கலவரத்தை தூண்டி அரசின் மேலும் போலீஸ் மேலும் பழிபோடுவதில் இவர்கள் கில்லாடிகள். நாட்டை துண்டாக்குவோம், ஜின்னா கொடுத்த விடுதலையை மீண்டு பெறுவோம், எதிர்ப்போரை விட்டுவைக்க மாட்டோம் என கூவலிட்டு அப்பாவி மக்களையும் பலிக்கடவாக்கிய கூட்டமிது. மணிசங்கர், சல்மான் குர்ஷித் மந்திரி பதவியில் இருந்தவர்கள். இவர்கள் பேசிய கேவலமான பேச்சுக்கள், குழந்தகளையும் தூண்டிவிடும் சொற்கள் ஒன்றிரண்டல்ல. வாரிஸ் பட்டான் கூறியது மன்னிக்க தகாதது. பெண்கள் செய்யும் போராட்டமே உங்களை வியர்வடைய செய்தது. ஆண்களும் சேர்ந்து 15 கோடி மக்கள் ஒன்று திரண்டால் 100 கோடி மக்கள் என்ன ஆவார்கள் தெரியும் என சவால் விட்டார். ஹிந்து முஸ்லீம் ஒற்றுமையை சீரழிக்க இதைவிட மோசமான பேச்சு இருக்கமுடியாது. மக்களின் நன்மையையும் சமாதானத்தையும் வலியுறுத்தும் கேரளா காஜி முசலியார் அவர்களையும் விட்டுவைக்க வில்லை .ஏனனில் நல்மனம் கொண்ட முஸ்லீம் மக்களில் அவர் ஒருவர். ராகுல் காந்தி சோனியா காந்தி தூண்டிய பேச்சுக்கள் பல. சுய நலத்திற்காக மக்களை உசுப்பி விட்டு அவர்கள் துன்பத்தில் திளைக்கும் கூட்டங்கள் இவை. இவர்கள் அனைவரின் தூண்டுதல் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் . அதன் பரிணாமம்தான் டெல்லியில் இரண்டு நாட்கள் நடந்த துன்பகரமான கொலைகள் கொள்ளைகள். இனிமேலாவது வன்முறையை விட்டுட்டு நன்முறையில் நடைபயில முயல்வார்கள் என நம்புவோமாக.

Advertisement