Advertisement

24 மணி நேரத்தில் 10 லட்சம் பாலோயர்: கலக்கும் ஜூனியர் ரொனால்டோ!

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

பிரேசில்: இன்ஸ்டாகிராமில் கணக்குத் துவக்கிய 24 மணி நேரத்தில், 10 லட்சம் பாலோயர்களைப் பெற்றார், கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் மகன்.
கால்பந்து உலகின் ஜாம்பவானாக திகழும் போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானா ரொனால்டோவின் ஒன்பது வயது மகனும் ஒரு கால்பந்து வீரர். அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் நுழைந்துள்ளார். 'மினி கிறிஸ்டியானோ ரொனால்டோ' என்ற பெயரில் தனது கணக்கைத் துவக்கியுள்ளார். அவர் கணக்குத் துவக்கி சில மணிநேரங்களிலேயே, 10 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் அவரை, 'பாலோ' செய்ய துவங்கியுள்ளனர்.
இத்தாலி, ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் போர்க்சுகீஸ் உள்ளிட்ட நான்கு மொழிகளில் தனது கணக்கைத் துவக்கியுள்ள அவர், முதன் முதலாகப் பதிவிட்ட வீடியோவை, 35 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். தற்போது வரை அவர், ஆறு பதிவுகளை மட்டுமே பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • kannan -

    he was portugal

Advertisement