Advertisement

உள்ளத்தால் உயர்ந்தார் குவாடன்! ரூ.3.4 கோடி நிதி அறக்கட்டளைக்கு அன்பளிப்பு

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சிட்னி: தற்கொலை செய்யப்போவதாக அழுத சிறுவன் குவாடனின் வீடியோ இணையத்தில் வைரலானதால் அவருக்கு ஆதரவாக ரூ.3.40 கோடி நிதி கிடைத்துள்ளது. அன்பளிப்பாக கிடைத்த பணம் முழுவதையும், அவர் அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பென் பகுதியில் வசிக்கும் யார்ரகா பேலஸ் என்ற பெண் தனது, 9 வயது மகனான குவாடனை பள்ளியிலிருந்து அழைத்து வரச் சென்ற போது நேர்ந்த அதிர்ச்சி சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.

குவாடனின் தலை பெரிதாகவும், கை, கால்கள் போதிய வளர்ச்சியின்றி குள்ளமாகவும் உள்ளதால், சக மாணவர்கள் சிறுவனை கேலி செய்தனர். இதற்காக, பள்ளி சீருடையில் இருக்கும் சிறுவன் குவாடன், கண்ணீருடன், 'எனக்குக் கயிறு கொடுங்கள், நான் சாக வேண்டும்,' தன் அம்மாவிடம் கேட்பது போல வீடியோ வெளியானது.
இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து சிறுவனுக்கு உலகம் முழுவதும் ஆதரவு அதிகரித்தது. அமெரிக்காவை சேர்ந்த காமெடியன் பிராட் வில்லியம்ஸ், 'கோ பன்ட் மீ' என்னும் தொண்டு நிறுவனம் தொடங்கினார்.

இதன்மூலம் நிதி திரட்டி, குவாடனையும் அவரது அம்மாவையும் டிஸ்னி லேண்டுக்கு அழைத்து செல்ல வழிவகை செய்தார். இதற்காக இதுவரை 4.75 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.40 கோடி) நிதி கிடைத்துள்ளது. இந்நிலையில் கிடைத்த நிதி முழுவதையும் அறக்கட்டளைக்கு அன்பளிப்பாக வழங்க உள்ளதாக குவாடனின் தாய் தெரிவித்துள்ளார். இப்பணத்தை முறையாகவும், நியாயமாகவும் செலவு செய்ய அவர்களால் மட்டுமே முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (11)

  • kumzi - trichy,இந்தியா

    உயரத்தில் குறைவாக இருந்தாலும் உள்ளத்தில் உயர்ந்துவிட்டாய் கண்ணா வாழ்க நீடூழி வளமுடன்

  • ravi - coimbatore,இந்தியா

    எப்போது இந்த மனிதகுலம் மாறப்போகுது? வளர்ச்சின்றி பிறப்பது இந்த குழந்தையின் குற்றமா ?

  • Vijay - Chennai,இந்தியா

    This kid has decided not to visit Disney and going to donate the entire money $475K..God bless you my son...

  • A.George Alphonse - Visakhapatnam,இந்தியா

    இந்த தெய்வ குழந்தைக்கு ஆண்டவனே கண் திறந்து அவனை கோடீஸ்வரனாக்கினார்.என்னே அவர் கருணை.எல்லாமே அவன் திருவிளையாடல்.

  • SaiBaba - Chennai,இந்தியா

    பணம் பெரிய விஷயம் தான். உலக மக்களின் அங்கீகாரமும் அன்பும் அதை விட பெரியது. வாழ்த்துக்கள்.

Advertisement