Advertisement

டில்லி கலவரத்திற்கு ஆம்ஆத்மி, காங்., காரணம்; ஜவடேகர்

புதுடில்லி: டில்லி கலவரத்திற்கு ஆம்ஆத்மி, காங்., கட்சிகளே காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான பிரசாரத்தை எதிர்கட்சிகள் தவறான முறையில் மக்களிடம் கொண்டு செல்கிறது. இதன் காரணமாக டில்லியில் கலவரம் நடந்துள்ளது. காங்., தலைவர் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். வன்முறைக்கு ஆம்ஆத்மியும் ,காங்கிரசும் தான் காரணம். ஆம்ஆத்மி கவு்னசிலர் தாகீர் உசேன் வீட்டின் மேற்கூரையில் பெட்ரோல் குண்டுகள், கற்கள் இருந்தது. மேலும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட வீடியோ ஆதாரம் உள்ளது.

பாகிஸ்தான் சென்ற மணிசங்கர் அய்யர் நாங்கள் ஷாகீன்பாக்கை நம்பி உள்ளோம். இது போல் சசிதரூர், சல்மான்குர்ஷித் ஆகியோரும் இது போல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.

வன்முறை ஏற்பட்டுள்ள டில்லியில் அமைதியை ஏற்படுத்த அனைத்து அரசியல் கட்சிகளும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதுதான் ஆரோக்கியமான அரசியல் ஆகும். தற்போது டில்லியில் அமைதி ஏற்பட்டுள்ளது. இது தொடர அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.டில்லி கோர்ட் நீதிபதி முரளிதர் கொலிஜியம் பரிந்துரையின்படி தான் மாற்றப்பட்டுள்ளார். இதில் அரசியல் நோக்கம் ஏதுவும் கிடையாது.
இவ்வாறு ஜவடேகர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (23)

  • chenar - paris,பிரான்ஸ்

    ஆம் ஆத்மீ அல்ல கொரியா மக்கள் கழகமே காரணம்

  • ஆப்பு -

    நம்பற மாதிரி காரணம் சொல்லுங்க அமைச்சரே. நேருதான் காரணம்னுட்டா யாரும் கேள்வி கேக்க மாட்டாங்கள்ளே...

  • Arachi - Chennai,இந்தியா

    குஜராத் மாடல் என்னவென்று புரிந்துவிட்டது.சுதந்திர்ப்போராட்டத்தைப் பார்த்ததில்லை, எவ்வளவு கடுமையாக இருந்திருக்கும் என்பதை உணரமுடிகிறது.

  • Sampath Kumar - chennai,இந்தியா

    மிஸ்டர் நக்கல் நீ எல்லாம் பேப்பர் ஒழுங்கா படிக்காத ஜென்மம் என்று புரிகிறது ஒரே மேடையில் விவாதிக்க அணைத்து எதிர் கட்சிகளும் அழைத்த பின்பும் அமித் எங்கே போய் ஒழிந்தார் ? பதில் சொல்

  • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

    சுப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதி அனுராக் மிஸ்ராவின் பேர் ஷாருக் என்று சொல்லி கலவர தீயில் மேலும் எண்ணெய் ஊற்றியதும் காரணமாம்

Advertisement