Advertisement

பிரியாணி அண்டாவுக்கு பாதுகாப்பு கேட்டு போட்டோவுக்கு ‛போஸ்

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூரில் பாஜ.,வினர் நடத்தும் பேரணியின் போது தங்களின் பிரியாணி அண்டாவிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கடை உரிமையாளர்கள் சிலர் போலீசில் புகார் மனு அளிக்க வந்தனர். போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்பு போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர்கள், மனு கொடு்க்காமலேயே கலைந்து சென்றனர்.

திருப்பூரில் காங்கேயம் ரோடு சிடிசி கார்னரில் நாளை (பிப்.,28) குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) ஆதரவாக பாஜ.,வினர் பேரணி நடத்த உள்ளனர். இதனால், அந்த பகுதியில் உள்ள பிரியாணி கடை உரிமையாளர்கள், திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் மனு அளிக்க வந்தனர். ஆனால் புகார் மனு அளிக்காமல் போலீஸ் ஸ்டேஷன் முன்பு நின்று போஸ் கொடுத்துவிட்டு, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.
கோவையில் கடந்தாண்டு இந்து முன்னணி பொறுப்பாளரின் இறுதி ஊர்வலத்தின்போது கடைவீதிகளில் இருந்த பிரியாணி அண்டாவை திருடி சென்றனர். இது போன்ற சம்பவம் தங்களுக்கும் நேரக்கூடாது என மனு அளிக்க வந்ததாக கூறியவர்கள், ஏன் புகார் மனு அளிக்காமல் சென்றனர் என தெரியவில்லை.

ஆடுகளுக்கு பாதுகாப்பு



இந்நிலையில், இந்து முன்னணியின் திருப்பூர் மேற்கு மாநகர் பொதுச்செயலர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் அதே காவல் நிலையத்தில், சாலையில் திரியும் வாயில்லா ஜீவனான ஆடுகளுக்கு பாதுகாப்பு வேண்டும், என மனு அளித்துள்ளனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (48)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    இது பிஜேபி கட்சிக்கு கிடைத்த அசிங்கம் கோவையில் இதே பிரியாணி பிரச்சனை தான் பிஜேபி அசிங்க பட பொறந்த கட்சி போல

  • தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா

    பிரியாணிக்கு பல்லிளித்து திரிவது திமுகவினரின் தொழில். இ மு வினர் பிரியாணி அண்டாவைத் தூக்கி ஏதாவது சாக்கடையில் போட்டுவிட்டுச் சென்று இருப்பார்கள். இவனுகதான் காக்கை,நாய்க் கறி இவற்றில் பிரியாணி செய்யும் ஆட்களாயிற்றே...தெரிந்திருந்தும் அதைத் திண்பார்களா?

  • Covim-20 - Soriyaar land,இந்தியா

    அவரவர் உடமைகளை அவரவர்கள் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும்... தவறவிடும் பொருட்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல...

  • மணி - புதுகை,இந்தியா

    குஸ்கா சாப்பிட்டா கொரோனா வராதாம், இவனுங்கள இன்னா பண்றது?

  • meenakshisundaram - bangalore,இந்தியா

    ஆஹா biriyani என்றதுமே திமுக நினைவு வந்துடுச்ச்சே அவிங்க தானே இந்த ம்மாதிரி ஓசி க்கு அலைவாங்க?துட்டு கொடுக்காம சண்டை போடுவாங்க ?அடுத்த கட்சி நிகழ்ச்சியை சாக்காக வைத்து இம்மாதிரி செய்ய தயாரா இருந்திருப்பாங்க?

Advertisement