Advertisement

நீதிபதியின் ஒப்புதலுடனே இடமாற்றம்: மத்திய அரசு விளக்கம்

புதுடில்லி : டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன. நீதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.


டில்லி கலவர வழக்கை விசாரித்த டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது : கடந்த 12.02.2020 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கொலிஜியம் அளித்த பரிந்துரைப்படி தான், டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இடமாற்றம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட நீதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த விவகாரத்தில், சட்டத்தில் கூறப்பட்ட அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன.வழக்கமான நீதிபதி இடமாற்றத்தை அரசியலாக்குவதன் மூலம், நீதித்துறை மீது அக்கட்சி வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இந்திய மக்கள் காங்கிரஸ் கட்சியை நிராகரித்துவிட்டனர். இதன் மூலம் அரசியலமைப்புகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி அதனை அழிக்க முயற்சி செய்கிறது. லோயா விவகாரத்தை உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதில், கேள்வி எழுப்புபவர்கள், நீண்ட விவாதத்திற்கு பின்னர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. உச்சநீதிமன்றத்தை விட உயர்ந்தவர் என ராகுல் கருதுகிறாரா?அவசர நிலையின் போது, நீதித்துறையின் சுதந்திரத்தை சமரசம் செய்ததும், நீதிபதிகளின் குரலை ஒடுக்கியதும் காங்கிரசின் வரலாறு. தாங்கள் விரும்பியபடி தீர்ப்பு வந்தால் அதை கொண்டாடுவதும் இல்லையென்றால், கேள்வி எழுப்பவும் செய்கின்றனர்.

ஆட்சேபனைக்குரிய பேச்சுகள் குறித்து பாடம் எடுக்க காங்கிரசுக்கு உரிமையில்லை. நீதிமன்றம், ராணுவம், சிஏஜி, பிரதமர், இந்திய மக்கள் மீது, சோனியா குடும்பம் மற்றும் அவர்களது வாரிசுகள் தொடர்ச்சியாக கடுமையான வார்த்தைகளை பிரயோகப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (34)

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  மூத்த நான்கு நீதிபதிகளை புறந்தள்ளி விட்டு அடுத்ததாக வரிசையில் இருந்தவரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்தனர் இந்திரா, காங்கிரஸ் கட்சி. அவர்கள் இன்று இந்த இடமாறுதலுக்கு இவ்வளவு கூப்ப்பாடு போடுகின்றனர். அவர்களைப்பொறுத்த வரையில் காங்கிரஸ் கட்சி, அதன் தலைவர் மிகவும் உசத்தி, எப்படி என்றால் அகில இந்தியாவையும் விட உசத்தி, அவர்கள் செய்தது எல்லாமே ஞாயம், சரி. இந்த நிலை என்றுதான் மாறுமோ, அவர்கள் என்றுதான் தெளிவார்களோ?

 • Rahim Gani - Karaikudi,இந்தியா

  இரவோடு இரவாக அவரை அவசர அவசரமாக மாற்றியதில் இருந்தே தெரியுதுடா சங்கிகள் தான் இந்த கலவரத்திற்கு காரணம் என்று நீதி அழியாது உங்களை அழிக்காமல் விடாதுடா அதிகார வெறியால் ஆடும் வரை ஆடிகொள்ளுங்க உங்களுக்கு முடிவுரை சீக்கிரமே எழுதப்படும், அந்த செய்தியையும் எங்கள் தினமலரே வெளியிடும்..... ..

  • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

   அதுவும் 2002 இல் நடந்த அதே குஜராத் மாடல் நிகழ்வு

 • MANITHAN -

  மனசாட்சி இல்லையா?

 • Pandiyan - Chennai,இந்தியா

  இரவோடு இரவாக நீதிபதி முரளிதரன் இடமாற்றம் செய்தது பாஜக அரங்க அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அவமானமாக இல்லை ..நீங்கள் இவளவு கீழ்த்தரமான அரசியல் செய்வது நாட்டிற்க்கே தலைகுனிவு ...

 • Ab Cd - Dammam,சவுதி அரேபியா

  மிரட்டினால் யார் தான் பயபபட மாட்டார்கள் இரவோடு இரவாக மாற்றவேண்டிய அவசியம் என்ன வந்தது

  • Anand - chennai,இந்தியா

   மிரட்டுவது மூர்க்கங்களின் பிறவி குணம்....

Advertisement