Advertisement

திமுக எம்எல்ஏ., கே.பி.பி.சாமி காலமானார்

இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மீன்வளத்துறை முன்னாள் அமைச்சரும், திருவொற்றியூர் சட்டசபை தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுமான, கே.பி.பி.சாமி, 57, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடலுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.


திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., - கே.பி.பி.சாமி. ஒன்றரை ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மூன்று நாட்களுக்கு முன் வீடு திரும்பினார். நேற்று காலை, 6:10 மணிக்கு, திருவொற்றியூர் கே.வி.கே.குப்பத்தில் உள்ள, தன் இல்லத்தில் உயிரிழந்தார்.இவர், 2006 பொதுத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, முதல் முறையாக, எம்.எல்.ஏ.,வாக தேர்வானார். கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில், மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார். 2016 தேர்தலில், திருவொற்றியூர் தொகுதியில் மீண்டும் வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வானார். சாமியின் மனைவி உமாசாமி, மகன் இனியவன் இருவரும், ஏற்கனவே, மரணமடைந்து விட்டனர். மற்றொரு மகனான பரசு பிரபாகரனும், மகள் உதயாவும் உள்ளனர். இவர்களில், மகள் உதயா ஆஸ்திரேலியாவில் வசிப்பதால், அவர் வந்த பின், இன்று மாலை, 3:00 மணிக்கு, இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன.

ஸ்டாலின் அஞ்சலிகே.பி.பி.சாமி உடலுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலர், கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர், எ.வ.வேலு, எம்.பி.,க்கள் கலாநிதி, தமிழச்சி தங்க பாண்டியன், மாவட்ட செயலர்கள் சுதர்சனம், சேகர்பாபு, நாசர் உட்பட ஏராளமான தி.மு.க., வினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.


அஞ்சலி செலுத்திய பின், ஸ்டாலின் கூறுகையில், ''கே.பி.பி.சாமியின் மறைவு, தி.மு.க.,விற்கும், மீனவ சமுதாயத்திற்கும் பேரிழப்பு. உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, நேரில் சென்று பார்த்தேன். இயக்க பாடலை பாடி, அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்,'' என்றார்.


பின், ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'தி.மு.க., வின் சுறுசுறுப்பு தொண்டராக செயல்பட்டவர் கே.பி.பி.சாமி. சட்டசபையில், அவர் ஆற்றிய பணிகளும், என்னுடன் இணைந்து பணியாற்றிய காலங்களும் மறக்க இயலாது' எனக் கூறியுள்ளார். கே.பி.பி.சாமியின் மறைவுக்கு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை சரிவுதமிழக சட்டசபையில், தி.மு.க.,- - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 100ல் இருந்து, 99 ஆக குறைந்துள்ளது.தமிழக சட்டசபையில், அ.தி.மு.க.,விற்கு, சபாநாயகருடன் சேர்த்து, 125 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான தி.மு.க.,விற்கு, 100 எம்.எல்.ஏ.,க்கள், அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஏழு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர். ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., உள்ளார்.சென்னை, திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.பி.சாமி, உடல் நலக்குறைவால், நேற்று காலை இறந்தார். இதன் காரணமாக, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை, 99 ஆக குறைந்துள்ளது.தற்போது, திருவொற்றியூர் எம்.எல்.ஏ., பதவி காலியாக உள்ளது. காலியான இடத்திற்கு, ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். ஆனால், தமிழக சட்டசபை பொதுத்தேர்தல், அடுத்த ஆண்டு நடக்க உள்ளதால், திருவொற்றியூர் சட்டசபை தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (58)

 • Bhaskaran - Chennai,இந்தியா

  Aayutha பூஜை அல்லது தீபாவளி செலவுக்கு ஒற்றியூர் காரர்களுக்கு பணம் கிடைத்துவிடும்

 • periasamy - Doha,கத்தார்

  RIP

 • நக்கல் -

  மொதல்ல திருவற்றியூர் பக்கம் ஒரு சின்ன வீடா பாரத்து ஏற்பாடு பண்ணணும்... தேர்தல் போது பணம் கொட்டும்...

  • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு

   உங்கள் தலைவர் சின்ன வெற்றிக்கு என்ன ஆயிற்று தெரியும் இல்ல

  • மூல பத்திரம் - ரோம்,

   ஏன் இந்த போலி இமிடேஷன்

 • Santhosh Gopal - Vellore,இந்தியா

  சாமி இறந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக சுடலை கூறினார். சுடலைக்கு வயிற்றில் புளியை கரைக்கும். இடைத்தேர்தல் வருகிறதே என்று. திமுக தலைவராக பிரசாந்த் கிஷோர் பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் சட்டமன்ற இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே ஆகவேண்டும், அப்போது தான் அடுத்து 2021 ல், இந்த இடைத்தேர்தல் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டம், திமுக தான் வெற்றி பெரும் என்று ஊடகங்கள் முழங்க தொடங்குவார்கள். தோற்றுவிட்டால், பிரசாந்த் கிஷோர் இருந்தும் தோல்வி அடைந்தது, அதனால் பிரசாந்த் கிஷோர் மதிக்கமாட்டார்கள். ஜெயித்துவிட்டால், பிரசாந்த் கிஷோர் உதவியுடன் திமுக வெற்றி பெற்றது, வரும் 2021 தேர்தலிலும் பிரசாந்த் கிஷோர் வெற்றி பெற வைப்பார் என்ற நம்பிக்கை கட்சி தொண்டர்களுக்கு வரும். உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை வைத்து இடை போடமுடியாது. இந்த இடைத்தேர்தல் சற்று வித்தியாசமானது, இந்த இடைத்தேர்தல் முன்னோட்டம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் ஒரு வருடம் தான் இருக்கிறது, ஆளும் கட்சிக்கு வோட்டு போடலாம் என்று நினைத்து ஒட்டு போடமாட்டார்கள். இப்போது உள்ள நிலவரப்படி, அதிமுக தான் வெற்றி பெரும். இதை நினைத்து சுடலை தூக்கம் இந்நேரம் கெட்டிருக்கும். வண்ணாரப்பேட்டை பாய்களை தூண்டிவிட்டாகி விட்டது, அந்த நம்பிக்கையில் சுடலை நிம்மதி பெருமூச்சு விடலாம்.

  • Pannadai Pandian - wuxi,சீனா

   கண்டிப்பா திமுக மண்ணை கவ்வும்…..எடப்பாடி லேசுப்பட்ட ஆள் இல்ல….

  • முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா

   ஆமாம் ஜெயாவை 75 நாள் ஆஸ்பத்திரியில் இருக்கும்போது செய்ததை மறக்க முடியுமா

  • Santhosh Gopal - Vellore,இந்தியா

   சார், கரெக்ட், இடைத்தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால், அது வரும் பொது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். என்ன தான் ஆளும் கட்சியாக இருந்தாலும், ஆட்சி முடியும் தருவாயில் வரும் இடைத்தேர்தல்களில் மக்கள் ஆளும் கட்சி என்கிற அந்தஸ்துடன் வாக்களிக்கமாட்டார்கள். ஏன் என்றால் பொது தேர்தல் மனநிலையில் தான் வாக்களிப்பார்கள். இந்த தேர்தலை முன்னோட்டமாக கூட எடுத்து கொள்ளலாம். அதுவும் சென்னையில்... திமுக கோட்டை, எடப்பாடி தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் தேர்தல். சுடலை தோற்றுவிட்டால், பிரசாந்த் கிஷோருக்கு மதிப்பு போய்விடும். ஆகையால் புலி வாலை பிடித்த கதையாக இருக்கப்போகிறது சுடலை கதி. இப்போவே வயிற்றில் புலி கரைக்க ஆரம்பித்திருக்கும்.

  • Srinivas - Chennai,இந்தியா

   //எடப்பாடி லேசுப்பட்ட ஆள் இல்ல// எப்படிப்பட்ட ஆள் என்று கட்சி அடிமைகளுக்கு, மக்களுக்கும் தெரியும்.

 • Ashanmugam - kuppamma,இந்தியா

  கார், வீடு, பங்களா என சுகபோக வாழ்வு வாழ்ந்துவரும் வேளையில் விதி யாரை விட்டது. இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டிய முன்னாள் அமைச்சர் இறப்பு, அவங்க குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழைப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Advertisement