Advertisement

‛டிரம்பின் இந்திய பயணம் ராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்தும்: வெள்ளை மாளிகை அறிவிப்பு

வாஷிங்டன்: 'அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இந்தியப் பயணத்தால், இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்படும்' என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தப் பயணம் குறித்து, அமெரிக்க அதிபரின் அலுவலகமான, வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார ஒத்துழைப்பால் ஏற்படும் வளர்ச்சி, முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளால், இரு நாடுகளும் பலன் பெறும்.அதிபர் டிரம்ப், இந்தியாவுக்கு மேற்கொண்ட முதல் அரசு முறை பயணமாக இது இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவு நீண்ட காலமாக தொடர்கிறது.

அமெரிக்காவின் எரிசக்தி துறை ஏற்றுமதிக்கு மிகச் சிறந்த நாடாக இந்தியா உள்ளது. டிரம்பின் பயணத்தின்போது, இது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதில், அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக உள்ளனர்.பயங்கரவாதத்தை வேரறுக்க, இரு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.

இந்தப் பிரச்னையில் தொடர்ந்து இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்தப் பயணம், இரு நாடுகளுக்கும் பலனளிக்கக் கூடியது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.பாராட்டுவட அமெரிக்காவுக்கான இந்திய அமெரிக்க கிறிஸ்துவ சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:இந்தியாவில் உள்ள மத சுதந்திரம் நிலை குறித்து, பிரதமர் மோடியுடன் பேசியதற்காக, அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவிக்கிறோம்.மத சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினர் நலனைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு இனி சரியான நடவடிக்கைகளை எடுக்கும் என, நம்புகிறோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

.நண்பர்கள்டிரம்புடன் இந்தியா வந்திருந்த, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓபிரையன், 'இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.'உங்களுக்கு அமெரிக்காவிலும், வெள்ளை மாளிகையிலும் நண்பர்கள் உள்ளனர்' என, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

விரும்பி சாப்பிட்டார்டில்லியில் இருந்தபோது, ஐ.டி.சி., மவுரியா ஓட்டலில், அதிபர் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலனியா உள்ளிட்டோர் தங்கியிருந்தனர். அந்த ஓட்டலின், புகாரா ரெஸ்டாரென்டில் தயாரிக்கப்பட்ட, 'நான்' மற்றும் அசைவ உணவான, 'சிகாந்தாரி ரான்' ஆகியவற்றை, டிரம்ப் மற்றும் மெலனியா விரும்பி சாப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • ஆப்பு -

  மேக் இன் இந்தியா ஸ்கீமுலே அமெரிக்காவில் செஞ்சு இங்கே உபயோகப் படுத்துவோம் துடைச்சு, பெயிண்ட் அடிக்கறதெல்லாம் 100 சதவீதம் இந்தியாவுலேதான் நடக்கும்.

 • M.Selvam - Chennai/India,இந்தியா

  இதுக்கு இம்புட்டு ஆர்ப்பாட்டம் ..என்னிக்கி இந்தியாவில் உற்பத்தி செய்த தளவாடத்தை மட்டுமே உபயோகிப்பார்கள்? பேசுறது சக்கரையா இந்தியா இந்தியா ஆனா வாங்குறது அனைத்தும் வெளிநாட்டில் ..என்னைக்கு மக்கள் யோசிப்பார்கள்? அமெரிக்கா வியாபாரம் அவர்கள் நிறுவனங்கள் லாபம் ஈட்ட இவ்வளவு கட்டிபிடிபிடிப்பு சுவர் கட்டுவது அவலங்களை மறைக்க ...வெக்கமாயில்லை ?

 • sahayadhas - chennai,இந்தியா

  உங்க பொருளை வாங்க ஏமாந்தவங்க நாங்க தான் சாமி.

 • Raju - Auckland,நியூ சிலாந்து

  சீனாவும் பாகிஸ்தானும் நம்மை எப்போது ஒழிக்கலாம்னு திட்டம் போட்டு சுத்திக்கிட்டிருக்கும்போது அமெரிக்க கூட ராணுவ ஒத்துழைப்பை அதிகப்படுத்தி நவீன ஆயுதங்களை வாங்குவதில் என்ன தப்பு? ஓசி சோறு கும்பல் இதுக்கெல்லாம் பொங்கலாமா?

 • ஆப்பு -

  கேட்டுக்கோங்க... வெறும் ராணுவ தளவாட விற்பனை மட்டும் தான். அதுக்குத்தான் வந்தாரு. அதுக்கு ஒத்துழைப்பு சூப்பரா குடுப்பாரு. எல்லோரும் மகிழ்ச்சியா மட்டன் பிரியாணி வயிராற சாப்புட்டு கொண்டாடுங்க.

Advertisement