Advertisement

மலேசியாவின் அடுத்த பிரதமர் யார்?: எம்.பி.,க்களுடன் மன்னர் ஆலோசனை

கோலாலம்பூர்: மலேஷிய பிரதமர் மகாதீர் முகமது, ராஜினாமா செய்துள்ள நிலையில், பார்லிமென்ட் எம்.பி.,க்களை சந்தித்து, அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை, மன்னர் சுல்தான் அப்துல்லா, கேட்டறிந்து வருகிறார்.

மலேஷியாவில், 2018ல் நடந்த பொதுத் தேர்தலில், மகாதீர் முகமதுவின், மலேஷிய ஐக்கிய மக்கள் கட்சியும், அன்வர் இப்ராகிமின், மக்கள் நீதி கட்சியும் கூட்டணி வைத்து போட்டியிட்டு, ஆட்சியையும் பிடித்தன. ஆட்சிக்கு வந்ததும், விரைவில் பிரதமர் பதவியை விட்டுத் தருவதாக, அன்வர் இப்ராகிமுக்கு, மகாதீர் வாக்குறுதி அளித்தார். ஆனால், மகாதீர் பிரதமராக தொடர்ந்த நிலையில், கூட்டணி கட்சியுடன் மோதல் போக்கு நிலவியது.

இதற்கிடையில், அன்வரை பிரதமராக்க விரும்பாத அவரது கட்சி உறுப்பினர்கள் இருவர், அவர் ஆதரவு இல்லாமல், புதிய அரசை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சியினர் மற்றும் மகாதீர் கட்சி உறுப்பினர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.இது சர்ச்சையை ஏற்படுத்தவே, மகாதீர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். மகாதீர் முகமது நேற்று கூறுகையில், ''என்னை அனுமதித்தால், அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைக்க, முயற்சி எடுப்பேன்.எனக்கு, ஆதரவு இருந்தால், நான் மீண்டும் ஆட்சிக்கு வருவேன். இல்லையெனில், யார் தேர்வு செய்யப்பட்டாலும், அதை நான் ஏற்பேன், '' என்றார்.

இதையடுத்து, அன்வர் இப்ராகிம் கூறுகையில், ''மூன்று கட்சிகளிடம் இருந்து, எனக்கு ஆதரவு கிடைத்துள்ளது. இந்த அரசை கவிழ்க்க, கடந்த வாரம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.'

'எனினும், மலேஷிய மக்களின் ஆணையை பாதுகாக்கப்பதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம்'' என்றார்.இந்நிலையில், பிரதமரை நியமிக்கும் அதிகாரம் கொண்ட மலேஷிய மன்னர் சுல்தான் அப்துல்லா, அனைத்து எம்.பி.,க்களையும் சந்தித்து, அவர்களின் ஆதரவு யாருக்கு என, கேட்டறிந்து வருகிறார்.

112 எம்.பி.,க்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே, ஆட்சி அமைக்க முடியும் என்பதால், இரண்டு பேரில், பிரதமராக அரியணை ஏறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.மேலும், 83 உறுப்பினர்களை இதுவரை சந்தித்துள்ள மன்னர், இதர, 139 உறுப்பினர்களையும் சந்தித்தபின், இறுதி முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • dandy - vienna,ஆஸ்திரியா

    அடுத்த பிரதமர் ..அன்வர் பாய். ஆனால் நிச்சயம் சுடலை கான் டாஸ்மாக் நாட்டில் முதல்வராக முடியாது

  • Siva - Johor,மலேஷியா

    மிகவும் கடினகாலம் மலேசியாவிற்கு.

Advertisement