Advertisement

பிஜு ஜனதா தளம் தலைவராக மீண்டும் நவீன் பட்நாயக்

புவனேஸ்வர்: ஒடிசாவில், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவராக, மாநில முதல்வர் நவீன் பட்நாயக்,73, தொடர்ந்து, எட்டாவது முறையாக, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில், பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. இக்கட்சியின் நிர்வாகிகள் தேர்தல், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது .இந்நிலையில், நேற்று நடந்த கட்சி தலைவர் பதவிக்கு, நவீன் பட்நாயக் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதனால், அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக, தேர்தல் அதிகாரி பி.கே.தேவ் அறிவித்தார்.

கட்சி துவங்கிய, 1997ம் ஆண்டு முதல், தலைவராக பதவி வகித்து வரும் நவீன் பட்நாயக், தற்போது எட்டாவது முறையாக தலைவர் பதவிக்கு தேர்வாகி உள்ளார். ஒடிசாவில், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து ஐந்தாவது முறையாக, அவர் முதல்வராக பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    மக்களின் ஆதரவு இருந்து தொடர்ந்து தலைவராக இருக்கலாம்.

  • chandran - ,

    கட்டுமரத்திற்கே போட்டியா

  • kulandhai Kannan -

    வாழ்க ஜனநாயகம் !!!?

  • ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா

    ஓனர் ஓனராகவே தொடர்வது ஒரு செய்தியா? முக்கியமான தகவல் இவர் ஒரியா மொழிப்பற்றுப்பற்றி பேசுவதில்லை மாநிலக்கட்சிதான் என்றாலும் மொழி அரசியலே அங்கில்லை . ஏனெனில் இவருக்கு மாநிலத்தின் மொழியான ஓரியாவை உளறலின்றிப்பேசவோ எழுதபடிக்கத்தெரியதாம் .நம் சுடலையின் நாவன்மைமிக்க செந்தமிழுக்குப் போட்டியாம்

  • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

    ஆயுளுக்கும் இவர்தான் நிரந்தர தலைவர். பிர்மச்சாரி ஆனதால் இவருக்கு பிறகு மருமக்கத் தாயம் வழியில் சகோதரி பிள்ளைகள் கைக்கு கட்சி போய்விடும்.

Advertisement