Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர் பகுதியில் உத்தேசிக்கப்பட்ட வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது.

கலெக்டர் கிரண் குராலா வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, கள்ளக்குறிச்சி சப் கலெக்டர் ஸ்ரீகாந்த், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் ரத்தினமாலா, திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., சாய்வர்தினி, நகராட்சி கமிஷனர் வெங்கடாசலம் உட்பட பலர் உடனிருந்தனர்.இவ்வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்கள் குறித்த தகவல்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம், விழுப்புரம் மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், சிற்றுராட்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகங்கள் வைக்கப்பட்டுள்ளது.பட்டியல் தொடர்பாக ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் வரும் மார்ச் 2ம் தேதி மாலை 5:00 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம். அதன்பின், மார்ச் 5ம் தேதி இறுதி ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியிடப்படுகிறது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement