Advertisement

போக்சோவில் இருவர் கைது

மூணாறு : மூணாறு அருகே சிறுமியை பலாத்காரம் செய்த தச்சுத் தொழிலாளியை 21 மாதங்களுக்கு பிறகு போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

மூணாறு அருகே குண்டளை, சான்டோஸ் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் தாமஸ் 38. தச்சுத் தொழிலாளியான இவர், கடந்த 2018 மே மாதம், நயமக்காடு எஸ்டேட் பகுதிக்கு பணிக்கு சென்றபோது, அப்பகுதியைச் சேர்ந்த13 வயது சிறுமியை தமிழகத்திற்கு கடத்திச் சென்றார். அங்கு பாலியல் பலாத்காரம் செய்தவர், இறுதியில் போடியில் இருந்து மூணாறுக்கு வந்த பஸ்சில் சிறுமியை அனுப்பி வைத்து விட்டு தலைமறைவானார்.மூணாறு போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் கடந்த 21 மாதங்களாக தேடி வந்த நிலையில், எர்ணாகுளத்தில் முளகுகாடு பகுதியில் தாமஸ் இருப்பதாக தெரியவந்தது.

மூணாறு இன்ஸ்பெக்டர் ரெஜி எம். குன்னிபரம்பன் எர்ணாகுளம் சென்று, முளகுகாடு எஸ்.ஐ., ரோயின் உதவியுடன் தாமசை போக்சோ' சட்டத்தில் கைது செய்தார்.வாலிபர் கைதுபோடி: பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி தற்போது போடியில் வசிக்கிறார். கெங்குவார்பட்டி ரைஸ் மில் தெருவை சேர்ந்த பெத்தணசாமி 22, என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ,அச்சிறுமியை மதுரைக்கு கூட்டிச்சென்று பலாத்காரம் செய்தார். வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். சிறுமியின் தாயார் புகாரில் பெத்தணசாமி மீது பலாத்காரம், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போடி டவுன் போலீசார், அவரை கைது செய்தனர்.------------
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement