Advertisement

ஊரக விளையாட்டுப்போட்டி

தேனி : தேனி நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஊரக விளையாட்டு போட்டி நடந்தது. சிறப்பு டி.ஆர்.ஓ. தியாகராஜன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் அஸ்வின் வினோதன் வரவேற்றார்.

தேனி கம்மவார் பாலிடெக்னிக் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் செல்வகுமார் வாழ்த்தினர். இதில் கபடி, வாலிபால், டென்னிகாய்ட், கோ-கோ போட்டிகளில் 21 அணி மாணவ, மாணவியர் பங்கேற்று ஆர்வமாக விளையாடினர். இன்று மாலை இளையோர் கலை விழா நடக்கிறது. நேரு யுவகேந்திரா அலுவலர் ஸ்ரீராம்பாபு நன்றி கூறினார்
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement