Advertisement

விஷப்பூச்சி நடமாட்டத்தால் அச்சம்

பெரியகுளம் : பெரியகுளம் பொதுப்பணித்துறை சார்பில் 1996-- 97 ம் ஆண்டு சோத்துப்பாறை அணை கட்டுமானப்பணி துவங்கி 2001ல் முடிந்தது. அதற்காக தண்ணீர் லாரி, கலவை இயந்திரம் உட்பட பொருட்களை வாங்கி பயன்படுத்தினர்.

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள லாரி, முந்தைய காலங்களிலே ஏலம் விட்டிருந்தால் நல்ல விலைக்கு போய் இருக்கும். அதைவிடுத்து தற்போது அது அலுவலக வளாகத்தில் வெயிலில் காய்ந்து, துருப்பிடித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் பேட்டரி உள்ளிட்ட பொருட்கள் திருடுபோனது.

தற்போது டிரைவர் சீட் பகுதியில், விஷப்பூச்சிகள் அதிகம் தங்கியுள்ளது. அவை அவ்வப்போது அலுவலகத்திற்குள் செல்கிறது. இதனால் பெண் அலுவலர்கள் அச்சத்தில் உள்ளனர்.பொதுப்பணித்துறை நிர்வாகம் லாரியை ஏலம் விட்டு அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement