Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு பாட புத்தகங்கள் தயார்

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று கல்வி மாவட்டங்களின் பள்ளிகளுக்கு 6.47 லட்சம் முதல் பருவ இலவச பாட புத்தகங்கள் வரத்துவங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார், உளுந்துார்பேட்டை ஆகிய 3 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 2,500 பள்ளிகளுக்கான அடுத்த கல்வியாண்டுக்குட்பட்ட அரசின் இலவச முதல் பருவ பாட புத்தகங்கள் சிவகாசி, சென்னை, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் அச்சிடப்பட்டு வருகிறது.கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட 3 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான அரசு, தனியார், நிதியுதவி பெறும் பள்ளிகள் அனைத்திற்குமாக தமிழ்வழிக் கல்விக்கு 5 லட்சத்து 82 ஆயிரத்து 31 பாட புத்தகங்கள், ஆங்கில வழிக்கல்விக்கு 65 ஆயிரத்து 22 புத்தகங்கள் என மொத்தம் 6 லட்சத்து 47 ஆயிரத்து 53 புத்தகங்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது.புத்தகங்கள் இறக்கும் பணியை கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., குமரன், டி.இ.ஓ., கார்த்திகா ஆகியோர் பார்வையிட்டனர்.

அத்துடன் டி.இ.ஓ., நேர்முக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி, அலுவலக கண்காணிப்பாளர் சுப்ரமணியன், பிரிவு உதவியாளர் ராஜா உள்ளிட்டவர்கள் வரப்பெற்ற புத்தகங்களை பாதுகாப்பாக வைக்கும் பணிகளை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக அனைத்து பள்ளிகளுக்குமான அரசின் இலவச நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற தளவாட பொருட்களும் வரத்துவங்கிடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement