Advertisement

ரோடு பணி முடக்கம்: சிரமத்தில் விவசாயிகள்

போடி : போடி அம்மாபட்டி சடையாண்டி கோயிலில் இருந்து டொம்புச்சேரி இணைப்பு சுத்தகங்கை ஓடை வரை ரூ.20 லட்சம் செலவில் ரோடு அமைக்க ஜல்லிக்கற்கள் கொட்டியும் பணி துவங்காமல் உள்ளன.

போடி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்டது விசுவாசபுரம், அம்மாபட்டி கிராமமாகும்.விவசாயத்தையே முக்கிய தொழிலாக மக்கள் கொண்டுள்ளனர். அம்மாபட்டி சடையாண்டி கோயிலில் இருந்து விசுவாசபுரம், டொம்புச்சேரி சுத்தகங்கை ஓடை இணைப்பு வரை 2 கி.மீ., துாரம் பாதை இருந்தும் ரோடு வசதியில்லை. மாற்றுவழியான மீனாட்சியம்மன் கண்மாய்பாதை வழியாக செல்ல பாலம் இல்லை.இப்பகுதியினர் விசுவாசபுரத்திலிருந்து அம்மாபட்டி வழியாக சில்லமரத்துப்பட்டிக்கு நேரடியாக செல்ல முடியாமல், மீனாட்சிபுரம், மேலச்சொக்கநாதபுரம், சுந்தரராஜபுரம் வழியாக 6 கி.மீ., துாரம்சுற்றி செல்ல வேண்டியுள்ளது. இதனால் தினமும் சிரமம் அடைகின்றனர்.

அம்மாபட்டி சடையாண்டி கோயிலில் இருந்து விசுவாசபுரம் வழியாக டொம்புச்சேரி சுத்தகங்கை ஓடை இணைப்பு வரை ரோடு, பாலம் அமைக்க தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்து, டெண்டர் விட்டு ஓராண்டாகிறது.கடந்த மாதம் பணி துவங்க கற்கள் கொட்டினர். அதன்பின் முடங்கியுள்ளது. விளை பொருட்களை கொண்டு செல்ல விவாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.ரோடு பணியை விரைந்து முடிக்கஅதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement