Advertisement

வைக்கோல் ஏற்றி வந்த வேன் தீப்பிடித்து எரிந்தது

திருவெண்ணெய்நல்லுார்:வைக்கோல் ஏற்றி வந்த வேன் உயர் மின் கம்பத்தில் உரசி தீ பிடித்து எரிந்து சேதமானது.தர்மபுரி மாவட்டம், பெரியபள்ளத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் அருண்குமார், 25; டிரைவர். இவர் நேற்று மாலை 4:30 மணியளவில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மகேந்திரா பிக்கப் வேனில் வைக்கோல் எற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கிச் சென்றார்.விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த இருவேல்பட்டு அரசு விதை நெல் பண்ணை அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே சென்ற உயர் மின் கம்பியில் வைக்கோல் உரசி தீ பிடித்தது. இதில் வைக்கோல் மற்றும் வேன் முழுவதும் எரிந்து சேதமானது.தகவலறிந்து விரைந்து வந்து திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலைய நிலை அலுவலர் சுந்தரராஜன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement