Advertisement

பழங்குடியினர் பள்ளி ஆண்டு விழா

ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ அறக்கட்டளை பி.ஏ.சி.ஆர் சேதுராமம்மாள் சேரிட்டிடிரஸ்ட் சார்பில் நடைபெறும் ஜெயந்த் மலைவாழ் பழங்குடியின பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.

அய்யனார் கோயில், செண்பகத்தோப்பு, அத்திகோயில், பிளவக்கல் அணை, தாணிப்பாறை, மொக்கத்தான்பாறை, உப்புத்துறை,தலையணை பழங்குடியினர் குடியிருப்பு பகுதிகளில் இருந்து 450மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.சேதுராமம்மாள் டிரஸ்டி சாரதா தீபா வரவேற்றார். மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பானுகோபன் பேசினார்.கலெக்டர் கண்ணன் பழங்குடியினருக்கு ஆடைகள்வழங்கினார்.

ராம்கோ பள்ளிகளின் தாளாளர் ஸ்ரீகண்டராஜா, ராமசந்திர ராஜா, சுதர்சனம்மில்ஸ் நிர்வாகி ஸ்ரீராம்குமார் ராஜா, ராஜபாளையம் தாசில்தார் ஆனந்தராஜ்,டி.எஸ்.பி., நாகசங்கர், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் கணேசன்,பி.ஏ.சி.ஆர் டிரஸ்ட் பள்ளி தலைமை நிர்வாக அதிகாரி வெங்கட்ராஜ்,ராம்கோ டிரஸ்ட்களின் செயலாளர் குருசாமி, ராம்கோ கல்வி நிலைய தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை மலைவாழ் மக்கள்சேவைப்பிரிவு மேலாளர் முருகேசன் தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement