Advertisement

இந்தியன் வங்கி கிளை மேலாளர்களுக்கு பயிற்சி

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில் இந்தியன் வங்கியின் கடலுார், புதுச்சேரி மண்டலங்களைச் சேர்ந்த கிளை மேலாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது.கள்ளக்குறிச்சி முதன்மை மேலாளர் சுப்ரமணி தலைமை தாங்கினார். கடலுார் மண்டல அலுவலக முதுநிலை மேலாளர் ஜகந்நாதன், முதன்மை மேலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் வழிகாட்டுதல்படி கடலுார், புதுச்சேரி மண்டலங்களை சேர்ந்த இந்தியன் வங்கி 35 கிளை மேலாளர்களுக்கு, மத்திய அரசின் திட்ட பயன்கள் கிராமப்புற வாடிக்கையாளர்களை சென்றடைவதற்கான பயிற்சியை சென்னை ஊழியர்கள் பயிற்சி மைய முதுநிலை மேலாளர் தமிழ்மணி சுப்ரமணியன் நடத்தினார்.பயிற்சியில் மத்திய அரசின் சேமிப்பு வங்கி திட்டம், முத்ரா கடன், பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா, சேமிப்பு கணக்கு துவங்குவது, ஆயுள், விபத்து காப்பீடு திட்டங்கள், அடல் பென்ஷன் யோஜனா, ஓய்வூதிய திட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement